சிவ்தாஸ் மீனா ட்ரான்ஸ்பர் ஐடியா… பலே ஸ்கெட்ச் ரெடி… அடுத்த ரவுண்டில் ஐஏஎஸ் அதிகாரிகள்!

தமிழகத்தின் 49வது தலைமை செயலாளராக கடந்த ஜூன் 30ஆம் தேதி நியமிக்கப்பட்டார் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ். இவரது சொந்த மாநிலம் ராஜஸ்தான். 30 ஆண்டுகளுக்கும் மேல் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர். கடந்த அதிமுக ஆட்சியிலும் முக்கியமான அதிகாரியாக விளங்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக இடம்பிடித்தவர்.

மு.க.ஸ்டாலின் ஆட்சிஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இவர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தொடர்ந்தார். அப்போது டெல்லி லாபிக்கு சிவ்தாஸ் மீனா சரியாக இருப்பார் என ஓர் அரசியல் கணக்கு போடப்பட்டது. அதற்குள் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு டெல்லி சென்றார். இந்த சூழலில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் தலைமை பொறுப்பிற்கு வந்திருக்கிறார்.​ஆளுநர் ஆர்.என்.ரவி குடைச்சல்வேலை விஷயத்தில் மிகவும் கறார் என சக அதிகாரிகள் சர்டிபிகேட் கொடுக்கின்றனர். அதேசமயம் வட இந்திய பின்னணி, டெல்லி லாபி உள்ளிட்டவை சில சலசலப்புகளையும் ஏற்படுத்தின. ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு தினந்தோறும் குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், ஆட்சிக்குள்ளேயே வடக்கின் ஊடுருவலா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்புவதை பார்க்க முடிகிறது.
​ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்இவர் வந்ததும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் சரமாரியாக நடந்தன. ஜூன் 30ஆம் தேதிக்கு பின்னர் 4 முறை அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் 33 அதிகாரிகளுக்கு இடமாற்றமும், புதிய பொறுப்புகளும் வழங்கப்பட்டன. ஆனால் ரெய்டில் சிக்கிய அதிகாரிகள், கடந்த ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள் உள்ளிட்டோரும் முக்கியமான துறை செயலாளர்களாக தொடர்வது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
சர்ச்சை அதிகாரிகள்உதாரணமாக சென்னை மாநகராட்சி டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக டி.கார்த்திகேயன் ஐஏஎஸ் மீதான குற்றச்சாட்டு, தருமபுரி ஆட்சியராக இருந்த போது கொரோனா கிருமி நாசினி கொள்முதல் முறைகேட்டில் ஈடுபட்டதாக மலர்விழி ஐஏஎஸ் மீது எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
​தலைமை செயலாளர் அடுத்த பிளான்இந்நிலையில் கோட்டை வட்டாரத்தில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் அடுத்த பணியிடமாற்ற ஏற்பாட்டிற்கு தயாராகி வருகிறாராம். இம்முறை முக்கியமான டாப் துறைகளுக்கு மட்டும் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்தனது சிந்தனை ஓட்டத்திற்கு ஏற்ப செயல்படும் அதிகாரிகள், துறை சார்ந்த செயல்பாடுகளை விரைவாக முடிக்கக் கூடிய அதிகாரிகள் ஆகியோரை தன் பக்கத்தில் வைத்து கொள்ளும் வகையில் திட்டமிட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது. முன்னதாக துறை சார்ந்த செயல்பாடுகளை வேகப்படுத்துமாறு புதிய தலைமை செயலாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்பட்டது.வடக்கு vs தெற்கு யுத்தம்இதை சிவ்தாஸ் மீனா எந்த அளவிற்கு சிறப்பாக மேற்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பின்னணியில் அரசியல் லாபிகள் இருந்தாலும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் என்பது வழக்கமான ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் பிறப்பிக்கும் அடுத்த உத்தரவு வடக்கு vs தெற்கு என அதிகாரிகள் மத்தியில் பிளவை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.