பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: கனமழை எதிரொலி – தெலங்கானா அரசு அறிவிப்பு!

தெலங்கான மாநிலத்தில்
கனமழை
கொட்டித் தீர்த்து வருவதால் இன்றும் நாளையும் (ஜூலை 20, 21) பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. தெலங்கானா மாநில வளர்ச்சி திட்ட குழு வெளியிட்ட அறிவிப்பில் நிர்மல், நிஸாமாபாத், காமரெட்டி, மேதக், சங்கரெட்டி, ராஜன்னா சிரிசில்லா, ஜெகட்டியாலா, பெடப்பள்ளி, மஞ்சிரியாலா, அடிலாபாத், ஜெயஷங்கர், புகுபலபள்ளி, ஹனுமகொண்டா, வாராங்கல், மற்றும் முருகு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடியின் கூட்டணி கணக்கு, இது நடந்தா போதும் ஜெயிச்சுடலாம்! பாஜக வைக்கும் ட்விஸ்ட்!

இந்நிலையில் தெலங்கானா கல்வி அமைச்சர் சபிதா ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் முதலமைச்சர் கேசிஆரின் அறிவுறுத்தலின் படி இரண்டு நாள்கள் (வியாழன், வெள்ளி) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

நிலைமை சீரான பின்னர், பொது மக்கள் பயணிப்பதற்கு ஏதுவான பின்னரே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை, தானே, ரத்னகிரி பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பலஹர், ராஜ்கட் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

கனமழை காரணமாக மும்பையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.