மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் சாரதி அனுமதி பாத்திரம் வழங்கும் நடைமுறை தாற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
நேற்று (19) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற ஆலோசனை சபையில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் எப்போதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் செவிப்புலனற்றோருக்கு முன்னுரிமை வழங்குவதாக த் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண செவிப்புலனற்றவர்களுக்காக 40 வருடங்களாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கியதில் பிரச்சினை காணப்படுவதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையாடல் பல இடம்பெறுவதுடன், கம்பஹா மாவட்டத்தில் ஒழுங்குபடுத்தல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்தால் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனுமதி பாத்திரம் வழங்கமுடியும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
‘அரசாங்கத்தினால் மாறுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போதைய நிறுத்தப் பட்டுள்ள அனுமதிப்பத்திரம் வழங்கலானது தாற்காலிகமானதாகும்.
நாட்டில் வீதி முறைகளுக்கு இணங்க இதை விட அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. மீண்டும் ஆலோசனை சபைக்கு முன்வைத்து எதிர்காலத்தில் அதற்காக அவசியமான சட்ட விதிகளை தயாரிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்’ என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டினார்.