வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. மழை வெளுக்கப் போகுதாம்… வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் எங்கு கனமழை பெய்யும் என்ற அறிவிப்பை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதிஒடிசாவின் வடமேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒடிசாவின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
​ வாக்கிங் சென்றபோது மின்னல் தாக்கி… இந்திய மாணவிக்கு அமெரிக்காவில் நேர்ந்த துயரம்!​ஒடிசாவுக்கு எச்சரிக்கைஇந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசாவின் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் கடக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதனை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தின் மல்கங்கிரி, கோராபுட், நபரங்பூர், நுவாபாடா, காலாஹண்டி மற்றும் கந்தமால் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை இனி ஈஸியா பார்க்கலாம்… தேவஸ்தானத்தின் அசத்தல் அறிவிப்பு!​ஆரஞ்ச் அலர்ட்இதனால் இம்மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை (7 முதல் 20 செமீ வரை) மிக அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும்
பூரி, குர்தா, நாயகர், கஞ்சம், கஜபதி, ராயகடா, கட்டாக், பௌத், சோன்பூர், போலங்கிர் மற்றும் பர்கர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
​ மீண்டும் ஒரு இரட்டை கொலை… அதிரும் பெங்களூரு.. பெற்றோரை கொடூரமாக அடித்துக்கொன்ற மகன்!​நாளையும் கனமழைநாளை சோனேபூர், போலங்கிர், சம்பல்பூர், பௌத், அங்கூல், கட்டாக் மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நபரங்பூர், நுவாபாடா, கலாஹண்டி, கந்தமால், கஞ்சம், பூரி, குர்தா, நாயகர், கேந்திரபாரா, தேன்கனல், தியோகார், ஜார்சுகுடா, பர்கர் மற்றும் சுந்தர்கர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
​ திமுகவுக்கு அண்ணாமலை போடும் ஸ்கெட்ச்… சூடுபிடிக்கும் ஏற்பாடுகள்!​மக்கள் அச்சம்ஏற்கனவே தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் வட மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. உத்தரகாண்ட், ஹிமாச்சல், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்ட யமுனை ஆற்று வெள்ளம் இன்னும் குறையாத நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் மழை பொழிவை கொடுக்கும் என்ற அறிவிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.​ திமுகவை இனி யாரும் அப்படி கேட்க முடியாது… நக்கலடிக்கும் கஸ்தூரி!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.