பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி உள்ளிட்டோர் நடித்த மரியான் படம் ரிலீஸாகி 10 ஆண்டுகளாகிவிட்டது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வந்த அனைத்து பாடல்களும் ஹிட்டாகின.
உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
இந்நிலையில் 10 ஆண்டுகள் ஆனதையொட்டி பரத்பாலா, தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இன்ஸ்டா லைவில் வந்து பேசினார்கள். அப்பொழுது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் மரியான் படத்தில் வேலை செய்தது குறித்து அவர்கள் மூன்று பேரும் பேசினார்கள். மரியான் போன்ற காதல் படத்தில் நடித்ததை மறக்கவே முடியாது. அப்படியொரு அருமையான பட வாய்ப்பை தனக்கு கொடுத்த பரத்பாலாவுக்கு நன்றி தெரிவித்தார் தனுஷ்.
இந்நிலையில் மரியான் போன்ற காதல் கதை கொண்ட படங்களில் நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும், அதை நாங்கள் பார்க்க வேண்டும் என தெரிவித்தார் பரத்பாலா. அதை கேட்ட தனுஷோ சிரித்துக் கொண்டே, எனக்கு 40 வயதாகிவிட்டது. இனி காதல் படமெல்லாம் செட் ஆகாது. அடுத்த தலைமுறை நடிகர்கள் பண்ணட்டும் என தெரிவித்தார்.
தனுஷின் பதிலை கேட்ட பரத்பாலாவும், ஏ.ஆர். ரஹ்மானும் அவரை கலாய்த்தார்கள். ஆனால் தனுஷ் சொன்ன பதில் அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
அதென்ன இனி காதல் படம் செட்டாகாது என்று சொல்கிறார். அவரின் மாமனார் ரஜினிகாந்தே வயதை எல்லாம் பார்க்காமல் காதல் படங்களில் நடிக்கிறார். சீனியர்கள் அஜித் குமார், விஜய் எல்லாம் காதல் படங்களில் நடிக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன? . உங்களுக்கு 40 வயதானாலும் பார்க்க அப்படித் தெரியவில்லை. உங்களை தொடர்ந்து காதல் படங்களில் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் அண்ணா என தெரிவித்துள்ளனர்.
தனுஷ் தற்போது டி50 படத்தை இயக்கி, நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். டி50 படத்தில் அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு வேலை செய்து வருகிறார் தனுஷ்.
டி50 படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி டி50 படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். அந்த பட வேலை முடிந்த கையோடு டி50 படப்பிடிப்பை துவங்கிவிட்டார். தனுஷின் பிறந்தநாள் ட்ரீட்டாக கேப்டன் மில்லர் படத்தின் டீசரை வெளியிடவிருக்கிறார்கள்.
அந்த டீசர் வேற லெவலில் வந்திருக்கிறது. அதை பார்த்து அனைத்து தரப்பு ரசிகர்களும் அசந்துபோகப் போகிறார்கள் என படக்குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Dhanush: திருப்பதியில் மகன்களுடன் சேர்ந்து மொட்டை அடித்த தனுஷ்
தனுஷின் பிறந்தநாள் அன்று டபுள் ட்ரீட் கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். முன்னதாக கேப்டன் மில்லர் படப்பிடிப்பு முடிந்த உடன் தன் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரை அழைத்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்தார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
டி50 படத்தில் மொட்டைத் தலையுடன் தான் தனுஷ் வருவார் என்று கூறப்படுகிறது.