வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மணிப்பூர் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணமாக அழைத்து வரப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நாங்கள் எடுக்க வேண்டி வரும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது: மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் மிகுந்த வேதனை ஏற்படுத்தியது. தற்போது அரசு நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் இது. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்தும் அரசு தெரிவிக்க வேண்டும். மீடியாக்களில் வெளியான காட்சிகள், அரசியல் சாசனம் தோல்வியடைந்துள்ளதை காட்டுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். மேலும் இது குறித்த வழக்கை ஜூலை 28 ல் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement