சூர்யா தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் இருந்து வந்தது. அந்த சமயத்தில் தான் சுதா கொங்காராவின் இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்தார் சூர்யா.
அப்படம் அவரை மீண்டும் வெற்றிப்பாதைக்கு மட்டும் அழைத்து வராமல் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது. இதையடுத்து ஜெய் பீம் என்ற படத்தை தயாரித்து நடித்து பாராட்டை பெற்றார் சூர்யா. மேலும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
கங்குவா அப்டேட்
இவ்வாறு தொடர் வெற்றிகளை குவித்து வரும் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய படமான கங்குவா என்ற படத்தில் நடித்து வருகின்றார் சூர்யா.
முதல் முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா – கார்த்தி..இயக்குனர் யார் தெரியுமா ?
இப்படம் சூர்யாவின் திரைவாழ்க்கையில் அதிக பொருட்ச்செலவில் உருவாகும் படமாகும். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிகின்றது. மேலும் வரலாற்று கதையம்சம் கொண்டு உருவாகும் இப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்
ஸ்டூடியோ க்ரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம் சூர்யாவின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் தற்போது கங்குவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகவுள்ளதாம்.
அநேகமாக சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் படி கங்குவா படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 ஆம் தேதி வெளியாகும் என தெரிகின்றது. இந்நிலையில் தற்போது கங்குவா படத்தை பற்றித்தான் இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர்.
வில்லனாக நட்ராஜ்
அந்தளவிற்கு இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தில் இருந்து ஒரு முக்கியமான தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது கங்குவா படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக பிரபல நடிகர் நட்ராஜ் நடித்து வருகிறாராம்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
கர்ணன், நம்ப வீடு பிள்ளை போன்ற பல படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நட்ராஜ் கங்குவா படத்தில் முக்கியமான வில்லனாக நடித்து வருகின்றார். மேலும் இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது இந்த செய்தி கசிந்துள்ளது. விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.