தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் எப்போது அரசியலில் களமிறங்க போகின்றார் என்றுதான் பலர் எதிர்பார்த்து இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தன் படங்களின் மூலம் தீவிரமான அரசியலை பேசி வந்த விஜய் தற்போது மெல்ல மெல்ல திரைப்படங்களை தாண்டி நிஜ அரசியலில் இறங்கவும் முயற்சித்து வருகின்றார்.
அது அவரின் செயலை பார்க்கும்போதே நமக்கு தெரிய வருகின்றது. மேலும் தன் மக்கள் இயக்கத்தை விஜய் அரசியல் கட்சியாக விரைவில் மாற்றுவார் என்றும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது வந்த தகவல் என்னவென்றால், விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 68 படத்தை முடித்துவிட்டு சில காலம் நடிப்பில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக செய்திகள் வருகின்றன.
அரசியலில் விஜய்
ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. என்னதான் விஜய் அரசியலில் களமிறங்கினாலும் நடிப்பில் இருந்து விடுப்பு எடுப்பாரா என்பது சந்தேகம் தான் என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள். எனவே ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் அரசியல் என்றுதான் விஜய் பயணிப்பார் என்றே தெரிகின்றது.
Thalapathy vijay: நான் பழசை மறக்கமாட்டேன்..சூப்பர்ஸ்டார் டைட்டில் பற்றி ஓபனாக பேசிய விஜய்..!
இந்நிலையில் கடந்த மாதம் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் தன் கையால் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த செயலை பலரும் பாராட்டிய நிலையில் விஜய் இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் அவரை அரசியலிலும் நாங்கள் ஆதரிப்போம் என்றனர்.
இதையடுத்து விஜய் தன் புது கட்சியை வருகின்ற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளார் என தகவல்கள் வருகின்றன. அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
லோகேஷ் கருத்து
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி பலர் தங்கள் கருத்துக்களை கூறி வர விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான லோகேஷிடமும் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. நேற்று ஒரு கல்லூரியின் விழாவிற்கு சென்றிருந்த லோகேஷிடம், விஜய் அரசியலுக்கு செட் ஆவாரா ? அவரின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும் என கேள்வி கேட்கப்பட்டது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அதற்கு பதிலளித்த லோகேஷ், இதை அரசியல் தெரிந்தவர்கள் சொன்னால் தான் சரியாக இருக்கும். எனக்கு அரசியல் தெரியாது, எனவே என்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றார் லோகேஷ். இதையடுத்து லோகேஷ் இந்த விழாவில் லியோ படத்தை பற்றி பல விஷயங்களை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.