நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகிவருக்கும் ஜெயிலர் படத்தில் வரும் காவாலா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி அனைவரையும் டான்ஸ் ஆட வைத்திருக்கிறது.
காவாலா பாடலுக்கு ஜானி மாஸ்டர் சொல்லிக் கொடுத்த ஸ்டெப்ஸை பக்காவாக ஆடியிருக்கிறார் தமன்னா. அந்த பாடலில் தலைவரை ஆட வைக்கவில்லையே என ஒரு சிலர் வருத்தப்பட்டார்கள்.
இந்நிலையில் தான் காவாலா பாடலுக்கு ரஜினி சூப்பராக டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகியிருக்கிறது. முத்து படத்திற்காக ரஜினிகாந்த போட்ட ஸ்டெப்ஸ் காவாலா பாடலுக்கு அவ்வளவு அற்புதமாக பொருந்தியிருக்கிறது.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் தான். தலைவர் டான்ஸ் செம என பாராட்டி வருகிறார்கள். காவாலா பாடலுக்கு 50 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் கிடைத்திருக்கிறது.
காவாலா பாடலை அடுத்து வெளியான ஹுகும் பாடலும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த பாடலை முதல் முறையாக கேட்டதுமே இது பெரிய ஹிட்டாகும் என ரஜினி தெரிவித்திருக்கிறார். அவர் கூறியது போன்றே நடந்துவிட்டது.
Rajinikanth: நான் ரஜினிகாந்த் பேசுறேன்: ஹுகும் பிரபலத்தை திக்குமுக்காட வைத்த ஜெயிலர்
ஹுகும் பாடலை எழுதிய சூப்பர் சுப்புவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்திற்கு சூப்பராக இசையமைத்திருப்பது அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.
காவாலா பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதினார். தெலுங்கு வார்த்தைகள் கலந்த பாடலாக வேண்டும் என அனிருத் கூறியதை கேட்டு அரை மணிநேரத்தில் எழுதிக் கொடுத்திருக்கிறார். காவாலா ஒரு குத்துப்பாட்டு என்பதை தாண்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதற்கு டான்ஸ் ஆடி வருகிறார்கள்.
ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனாக கெத்தாக வருகிறார் ரஜினி. ஜூலை 28ம் தேதி ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. இதற்கிடையே சற்று ஓய்வு எடுக்க மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கிறார் ரஜினிகாந்த்.
Rajinikanth: மாலத்தீவுகள் பீச்சில் சில்லிங் செய்யும் ரஜினி: ஷார்ட்ஸ், டி சர்ட்டில் செம கூல்
அவர் கடற்கரையோரம் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.
ஜெயிலர் ஷூட்டிங் முடிந்த உடனேயே ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட நிலையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
திரும்பி வந்ததும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினி. லால் சலாமை அடுத்து ஞானவேல் படத்திலும் இஸ்லாமியராக நடிக்கிறார்.
ஜெய்பீமை போன்றே தலைவர் 170 படமும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகவிருக்கிறது. அந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினி.
என்ன ரஜினி படத்தை இயக்குகிறீர்களா என லோகேஷ் கனகராஜிடம் கேட்டதற்கு, தயாரிப்பு தரப்பில் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றார். இதன் மூலம் அவர் ரஜினி படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டது. ரஜினி, லோகேஷ் கனகராஜ் சேரும் படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.