சென்னை: வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் SJ சூர்யா.
தொடர்ந்து இயக்குநராக வலம் வந்த SJ சூர்யா தற்போது வெரைட்டியான நடிகராகவும் மிரட்டி வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வரும் SJ சூர்யாவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே SJ சூர்யாவின் சம்பளம், சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.
கோடிகளில் புரளும் SJ சூர்யா : அஜித்தின் வாலி திரைப்படம் அவரது கேரியரை உச்சம் கொண்டு சென்றது. அதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் இயக்குநர் எஸ்ஜே சூர்யா. ஆசை, உல்லாசம் படங்களில் உதவி இயக்குநராக இருந்தபோது அஜித்திடம் நெருங்கி பழகிய SJ சூர்யா, அவரிடம் ஒரு கதை கூறியுள்ளார். அப்படி உருவானது தான் வாலி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாலி படத்தின் மேக்கிங்கை பாராட்டி எஸ்ஜே சூர்யாவுக்கு கார் பரிசளித்தார் அஜித். அதேபோல், தான் வாங்கிய முதல் அட்வான்ஸ் தொகையில் தனது உதவி இயக்குநர்களுக்கு பைக் வாங்கிக் கொடுத்து அசத்தியவர் எஸ்ஜே சூர்யா. இதனை சமீபத்தில் நடிகர் மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். வாலியை தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆரூயிரே, இசை ஆகிய படங்களை இயக்கிய எஸ்ஜே சூர்யா, அதன்பின்னர் டைரக்டர் சீட்டில் உட்காரவே இல்லை.
ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் இருந்த எஸ்ஜே சூர்யாவுக்கு எந்த இயக்குநரும் நடிக்க சான்ஸ் கொடுக்கவில்லை. இதனால் தானே இயக்குநராக மாறி, அதன்பின்னர் ஹீரோவானார். அதன்படி அவர் இயக்கி நடித்த திரைப்படங்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், நண்பன், இசை, இறைவி, ஸ்பைடர் போன்ற படங்களில் வெரைட்டியாக நடித்து மிரட்டியிருந்தார் எஸ்ஜே சூர்யா.
![SJ Surya Net Worth: Actor cum Director SJ Suryas Salary, Net Worth, and car details SJ Surya Net Worth: Actor cum Director SJ Suryas Salary, Net Worth, and car details](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/newproject-2023-07-20t083626-155-1689822388.jpg)
அதனால் தொடர்ந்து ஹீரோ, வில்லன், காமெடியன் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட் என இரண்டு பக்கமும் எஸ்ஜே சூர்யாவுக்கு சரியான மார்க்கெட் உள்ளது. இதனால், இயக்குநராக சம்பாதித்ததை விட இப்போது கோடிகளில் சம்பளம் வாங்குகிறாராம். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தில் எஸ்ஜே சூர்யா தான் வில்லன். இந்தப் படத்துக்காக அவர் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம்.
அதேபோல், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2, தனுஷின் D 50 ஆகிய படங்களுக்கும், தலா 5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம் எஸ்ஜே சூர்யா. நடிகராக பயணிக்கத் தொடங்கிய குறுகிய காலத்தில் மட்டும் எஸ்ஜே சூர்யாவின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாம். அதன்மூலம் எஸ்ஜே சூர்யாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 150 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
மாதம் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் எஸ்ஜே சூர்யா, ஆண்டுக்கு 40 முதல் 50 கோடி வரை சம்பாதிக்கிறாராம். சென்னையில் சொந்தமாக வீடு உட்பட சில சொத்துகளையும் வாங்கி குவித்துள்ளார். அதேபோல், சமீபத்தில் BMW Z4 Roadster Melbourne Red சொகுசு காரை வாங்கியுள்ளார். இதன் விலை 85 லட்சம் ரூபாய் என சொல்லப்படுகிறது. இதுதவிர ஆடி உட்பட மேலும் சில கார்களும் சொந்தமாக வைத்துள்ளார் எஸ்ஜே சூர்யா.
இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் எஸ்ஜே சூர்யா, இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.