நடிகராகும் ஆசையில் கோலிவுட்டுக்கு வந்த எஸ்.ஜே. சூர்யா ஒரு சுபயோக சுபதினத்தில் இயக்குநராகிவிட்டார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேர நடிகராக இருக்கிறார்.
உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
இன்று எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாள். இதையொட்டி திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அவர் தற்போது தனுஷ் இயக்கத்தில் டி50 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.
எஸ்.ஜே. சூர்யாவோ தன் ஆசை நிறைவேறிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். நடிகராக வேண்டும் என்று விரும்பினார். தற்போது கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருறார். அதனால் அவர் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் அவரின் ரசிகர்கள் சந்தோஷமாக இல்லையே.
எஸ்.ஜே. சூர்யாவை மீண்டும் இயக்குநராக பார்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. ஒரு நல்ல இயக்குநர் இப்படி படம் இயக்குவதை நிறுத்திவிட்டாரே என்பதே ரசிகர்ளின் வருத்தம்.
நடிக்க வேண்டாம் என்று உங்களை யாரும் சொல்லவில்லை. ஆனால் அதற்காக படம் இயக்காமல் இருப்பது சரியில்லை. தயவு செய்து எங்களுக்காக மீண்டும் படம் இயக்க வேண்டும் அண்ணா. நீங்கள் வித்தியாசமாக யோசித்து படம் எடுப்பவர். அந்த திறமையை வீணடிக்க வேண்டாம்.
எஸ்.ஜே. சூர்யா இயக்கும்…. என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஏமாற்றிவிடாதீர்கள் அண்ணா என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் இசை. அந்த படத்தை இயக்கி, நடித்ததுடன் தயாரிக்கவும் செய்தார். மேலும் இசை படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்தார்.
எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி, குஷி, அன்பே ஆருயிரே ஆகிய படங்கள் எல்லாம் ரசிகர்கள் என்றும் கொண்டாடும் படங்கள் ஆகும்.
ஹேட்டர்ஸே இல்லா நடிகர், இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா ஆவார். அவர் ஹீரோவாக நடித்தால் க்யூட்டாக இருக்கும். வில்லனாக நடித்தால் மிரட்டலாக இருக்கும். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
Dhanush: 40 வயசாகிடுச்சு, இனி லவ் எல்லாம் செட்டாகாது: தனுஷ் என்ன இப்படி சொல்லிட்டாரு!
எஸ்.ஜே. சூர்யாவை ஹீரோவாக பார்த்தால் வாவ், க்யூட் என்று சொல்லும் அதே ரசிகர்கள், அவரை வில்லனாக பார்க்கும்போது அது நடிப்பு என்பதை மறந்து சாபம் விடுவார்கள். அவர்களின் கோபமும், சாபமும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு கிடைக்கும் பரிசு ஆகும்.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவதற்கு பெயர் போனவர் எஸ். ஜே. சூர்யா. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பொம்மை. ஒரு பொம்மையை காதலித்து அதற்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதே கதை.
வழக்கம் போன்று பயங்கரமாக நடித்து கைதட்டல்களை பெற்றார். அடுத்ததாக அவர் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
நடிப்பு ஒரு பக்கம் தொடரட்டும், இயக்கம் ஒரு பக்கம் மீண்டும் துவங்கட்டும் என்பதே எஸ்.ஜே. சூர்யா ரசிகர்களின் ஆசையாகும். அவர்களின் ஆசையை அவர் நிறைவேற்றி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.