Swathi Reddy: காதல் கணவரை பிரிந்துவிட்டாரா சுப்ரமணியபுரம் ஸ்வாதி?

டேஞ்சர் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ஸ்வாதி ரெட்டி. ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார் ஸ்வாதி.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவருக்கும் விமானியான கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசுவுக்கும் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் ஸ்வாதியும், விகாஸும் விவாகரத்து பெறப் போகிறார்கள் என சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. அதற்கு காரணம் சமூக வலைதளத்தில் ஸ்வாதி செய்த காரியம்.

சமூக வலைதளத்தில் இருந்து தன்னுடைய திருமண புகைப்படங்களை நீக்கிவிட்டார் ஸ்வாதி. இதையடுத்தே ஸ்வாதியும், விகாஸும் பிரிந்துவிட்டதாக பேசப்படுகிறது. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

விவாகரத்து தகவலை ஸ்வாதி உறுதி செய்யவில்லை. ஸ்வாதியும், விகாஸும் பிரிந்துவிட்டார்கள் என பேசப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு விவாகரத்து பேச்சு கிளம்பியது.

இன்ஸ்டாகிராமில் இருந்த தன் கணவரின் புகைப்படங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டார் ஸ்வாதி. அதை பார்த்தவர்கள் விவாகரத்து என பேசினார்கள். அதை பார்த்த ஸ்வாதி கூறியதாவது,

ப்ரொஃபைலை கிளியர் செய்ய புகைப்படங்களை ஆர்கைவ் செய்தேன். அதை தாண்டி வேறு எதுவும் இல்லை என்றார்.

மேலும் தன் இன்ஸ்டாகிராம் கணக்கை டீஆக்டிவேட் செய்தார். இந்நிலையில் மீண்டும் அதே விவாகரத்து பேச்சு கிளம்பியிருக்கிறது.

ஸ்வாதியின் கணவர் விகாஸ் வாசு இந்தோனேசியாவில் வேலை செய்து வருகிறார். அவர்களின் திருமணம் ஹைதராபாத்திலும், திருமண வரவேற்பு கேரளாவிலும் நடந்தது.

முன்னதாக நடிகை நிஹாரிகா கொனிடெலா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் காதலர் கணவரான சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கினார். மேலும் திருமண புகைப்படங்களையும் நீக்கினார். அதை பார்த்தவர்களோ நிஹாரிகாவும், சைதன்யாவும் பிரிந்துவிட்டார்களோ என பேசினார்கள்.

அதன் பிறேக நிஹாரிகாவும், சைதன்யாவும் முறைப்படி விவாகரத்து பெற்றது தெரிய வந்தது. தாங்கள் பிரிந்துவிட்டதை இன்ஸ்டாகிராமில் உறுதி செய்தார் நிஹாரிகா.

Niharika: நானும், சைதன்யாவும் பிரிந்துவிட்டோம்: விவாகரத்தை அறிவித்த மெகா குடும்பத்து நடிகை

இந்நிலையில் நிஹாரிகாவை போன்றே ஸ்வாதியும் தன் திருமண புகைப்படங்களை நீக்கிவிட்டார். அப்படி என்றால் அவரும் விவாகரத்து கோரியிருக்கிறார் போன்று என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்வாதி தன் போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். மேலும் தான் நடிக்கும் படங்களை விளம்பரம் செய்து வருகிறார்.

Dhanush: 40 வயசாகிடுச்சு, இனி லவ் எல்லாம் செட்டாகாது: தனுஷ் என்ன இப்படி சொல்லிட்டாரு!

அவர் கடைசியாக போட்ட போஸ்ட்டில், விவாகரத்து குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீங்களும், கணவரும் பிரிந்துவிட்டீர்களா, இல்லை இந்த முறையும் புகைப்படங்களை ஆர்கைவ் செய்திருக்கிறீர்களா என கேட்டிருக்கிறார்கள்.

கெரியரை பொறுத்தவரை இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ஸ்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.