அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை, சமையலறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை மற்றும் சமையலறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங்பேடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சுகாதார பணிகளுக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அரசு மருத்துமவனைகளில் கழிப்பறை, சமையலறை ஆகியவை சுகாதாரமற்று இருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தொடர்ந்து வந்த புகாரையடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, சென்னை ஓமந்துாரார் அரசுபல்நோக்கு மருத்துவமனையில் ககன்தீப் சிங்பேடி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மருத்துவ உபகரணங்களை சுத்தம் செய்யும் மத்திய நுண்கிருமி நீக்கும் நிலையம் மற்றும் சலவையகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கழிப்பறை, சமையலறையின் சுகாதாரத்தையும் ஆய்வுசெய்தார். இதுகுறித்து, ககன்தீப் சிங்பேடி கூறியதாவது: தமிழகத்தில்உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் சுகாதாரமாக பராமரிக்க மருத்துவமனை முதல்வர்கள்,இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகிகள் கழிப்பறை, சமையலறைகளில் ஆய்வு செய்து சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.அவ்வாறு சுகாதாரமாக பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.