சென்னை: பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு 63 நாட்கள் வரை நிகழ்ச்சியில் நீடித்த அழகான ஹேண்ட்ஸம் பாய் ராம் ராமசாமி பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதல் மழையை பொழிந்துள்ளார்.
பிக் பாஸிலேயே ராம் ராமசாமி ஒன்றும் செய்யாத நிலையில், பிக் பாஸுக்கு பிறகாவது என்ன செய்கிறார் என்று பார்த்தால், ராப் பாடகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஏடிகே உடன் இணைந்து கொண்டு காஸ்மோ தம்பி என்கிற ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில், அந்த ஆல்பம் பாடலில் தனக்கு ஜோடியாக நடித்தவரையே காதலித்து கரெக்ட் செய்து விட்டாரா? என்கிற கேள்விகள் ராம் ராமசாமியின் லேட்டஸ்ட் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
மகேஸ்வரிக்கு நூல் விட்ட ராம்: பிக் பாஸ் வீட்டில் விஜே மகேஸ்வரிக்கு ராம் ராமசாமி காதல் வலை வீசிய காட்சிகள் எல்லாம் ரசிகர்களை ரொம்பவே கடுப்பாக்கி இருந்தன. மேலும், குயின்ஸி, நிவாஷினி, ஜனனி என பல இளம் போட்டியாளர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்த ராம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போதே லவ்வருடன் செல்ல வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டு வந்ததாக ட்ரோல் செய்யப்பட்டார்.
ஆனால், கடைசி வரை அவருக்கு யாருமே அந்த வீட்டில் செட் ஆகாத நிலையில், தற்போது ஆல்பம் பாடலில் கூட நடித்த ரஷிபிரபா என்பவருடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர்தான் காதலியா?: “What will I do without you.. Wanna know the story of how we met? 28th July, Cosmo Thambi” ரஷிபிரபாவுடன் கட்டிப் பிடித்து இருக்கும் போட்டோவை வெளியிட்ட ராம் ராமசாமி ரஷி பிரபாவை காதலிக்கிறாரா? அல்லது தனது புதிய வீடியோ பாடலுக்கான ப்ரமோஷன் வேலைகளில் தீயாக செயல்பட்டு வருகிறாரா என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
சமீபத்தில் பிக் பாஸ் பிரபலம் ஆயிஷா தனது காதலை அறிமுகம் செய்திருந்தார். பாவனி மற்றும் அமீர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இந்நிலையில், ராம் தனது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார் என பிக் பாஸ் ரசிகர்கள் இருவரது போட்டோவையும் ஷேர் செய்து வருகின்றனர்.