சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
பரபரப்பான பல வார எபிசோட்களை கொடுத்துவந்த பாக்கியலட்சுமி தொடரில் தற்போது இனியாவின் +2 ரிசல்ட் ஒருபுறம் மறுபுறம் நிச்சயதார்த்தத்தில் சமைக்கப்போன பாக்கியா சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
இனியா பள்ளியில் முதல் மாணவியாக தேர்வாகியுள்ள நிலையில், பாக்கியாவால் தன்னுடைய மகளின் கொண்டாட்டத்தில பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
நிச்சயதார்த்தத்தில் சிக்கிய பாக்கியாவை காப்பாற்ற கைக்கொடுக்கும் பழனிச்சாமி: விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக அதிரடி கிளப்பி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்ட கேரக்டர்களின் பர்பார்மென்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தொடர்ந்து சேனலின் டிஆர்பியில் மட்டுமில்லாமல் அர்பன் கேட்டகரி போன்றவற்றிலும் இந்த சீரியல் மற்ற சேனல்களின் சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கோபியிடம் இருந்து வீட்டை மீட்பதற்காக பெரிய சமையல் கான்டிராக்டை எடுத்து அதை சக்சஸாக முடிக்கிறார் பாக்கியா. இதன்மூலம் கிடைக்கும் பணம் மற்றும் தன்னுடைய மகன்களிடம் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து கோபிக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சம் ரூபாயை கொடுக்கிறார் பாக்கியா. இதையடுத்து தன்னுடைய மனைவி ராதிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் கோபி, கொஞ்சமும் விருப்பமில்லாமல் வீட்டை பாக்கியா பெயருக்கு எழுதி வைக்கிறார்.
இந்நிலையில் தற்போது அடுத்தக்கட்டத்திற்கு சீரியல் நகர்ந்துள்ளது. இனியாவிற்கு +2 ரிசல்ட் வருகிறது. அவர் தான் படிக்கும் பள்ளியில் முதல் மாணவியாக தேறுகிறார். இதனால் குடும்பமே உற்சாக வெள்ளத்தில் ஆழ்கிறது. ஆனால் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாத வகையில், முன்னதாக ஒப்புக்கொண்ட நிச்சயதார்த்த சமையல் கான்டிராக்டிற்கு பாக்கியா செல்கிறார். அங்கு அவர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
பாக்கியா, தன்னுடைய மகளுடன் பேச முயற்சிக்கும் நிலையில், அவரது குழுவினர், சமையலில் பாயசத்தை தீய்த்து விடுகின்றனர். இதனால் நிகழ்ச்சியில் பெரிய குழப்பமே ஏற்படுகிறது. பெண் வீட்டார் தங்களை அவமானப்படுத்திவிட்டதாக மாப்பிள்ளை வீட்டார் எகிறி குதிக்கின்றனர். இதனால் ஏற்படும் குழப்பத்தை அடுத்து, பாக்கியாதான் அனைத்திற்கும் காரணம் என்று கூறி அவரையும் அவரது குழுவினரையும் பிணையக் கைதியாக உட்கார வைக்கின்றனர்.
சிக்னல் இல்லாததால் தன்னுடைய குடும்பத்தினரிடம் எதையும் பேச முடியாத பாக்கியா, மனஉளைச்சலுடன் அந்த விழாவில் அமர்ந்து இருக்கிறார். அவரை பேசவும் அந்த நிகழ்ச்சியில் யாரும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், பாக்கியா நீண்ட நேரமாக வராததை அடுத்து பள்ளியில் நடைபெறும் விழாவில் கோபியும் ராதிகாவும் பெற்றோராக பங்கேற்கின்றனர். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த கோபம் கொள்கின்றனர். ஆனாலும் செய்வதறியாமல் திகைக்கின்றனர்.
இந்நிலையில் இனியாவை பாராட்டுவதற்காக வீட்டிற்கு வரும் பழனிச்சாமி, நிலைமையை கேள்விப்பட்டு, ராமமூர்த்தியுடன், பாக்கியாவை பார்க்க அந்த கிராமத்திற்கு செல்கிறார். அங்கு, பாக்கியாவின் நிலைமையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். தொடர்ந்து பாக்கியாவை அந்த சூழலிலிருந்து காப்பாற்ற அவர் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேச முயல்வதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. கண்டிப்பாக பழனிச்சாமி இந்த இக்கட்டான சூழலில் இருந்து பாக்கியாவை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.