சபரிமலை:சபரிமலையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்கள், நீண்ட நேரம் மழையில் நனைந்தபடி காத்து நின்றது தொடர்பாக, தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த கேரள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கோரியுள்ளது.
சபரிமலையில், ஆடி மாத பூஜை ஜூலை 17 முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த காலத்தில், சபரிமலையில் பலத்த மழை பெய்தது.
பம்பை முதல் சன்னிதானம் வரை செல்லும் பாதையில், பக்தர்கள் தங்குவதற்காக காத்திருப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால் இந்த அறைகள் திறக்கப்படாததால் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் நீண்ட நேரம் மழையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம், நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துஉள்ளது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு, உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சபரிமலை சிறப்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement