கீர்த்தி சுரேஷ் தன் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக வெளியான தகவல் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ்சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் விரைவில் பாலிவுட் செல்லவிருக்கிறார். வருண் தவானை வைத்து அட்லி இயக்கவிருக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தன் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Keerthy Suresh: நயன்தாராவை அடுத்து கீர்த்தி சுரேஷை பாலிவுட் அழைத்துச் செல்லும் அட்லிரோல் மாடல்நயன்தாரா எனக்கு பெரிய முன் உதாரணம்சம்பளம்படம் ஒன்றுக்கு ரூ. 2 கோடி வாங்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தன் சம்பளத்தை ரூ. 3 கோடியாக உயர்த்தியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கீர்த்திக்கு முன்பும் கூட பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது. மைதான் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அதன் பிறகு ஹீரோயினை மாற்றிவிட்டார்கள். இந்நிலையில் கீர்த்தியை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கவிருக்கிறார் அட்லி.
தெறி ரீமேக்Vijay: சக்சஸ்: அரசியலுக்கு வரும் விஜய்யை தேடி வந்த குட் நியூஸ்விஜய், சமந்தா, ஏமி ஜாக்சனை வைத்து தான் இயக்கிய தெறி சூப்பர் ஹிட் படத்தை தான் வருண் தவான், கீர்த்தி சுரேஷை வைத்து இந்தியில் ரீமேக் செய்கிறார் அட்லி. அதனால் அந்த படம் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும் என அட்லி ரசிகர்கள் சத்தியமே செய்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சரி, இன்னொரு ஹீரோயின் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நல்லது தான்மைதான் பட வாய்ப்பு கடைசி நேரத்தில் கை நழுவிப் போனதும் நல்லது தான். சூப்பர் ஹிட் படம் மூலம் பாலிவுட் செல்ல வேண்டும் என்று இருக்கிறது. இந்த நல்லது நடக்கத் தான் அப்படி ஒரு கெட்டது நடந்திருக்கிறது. இனி உங்களுக்கு எல்லாமே நல்லதாகத் தான் நடக்கும் கீர்த்திமா என அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
கெரியர்கீர்த்தி தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களிலும் பட்டையை கிளப்புகிறார். இது தவிர்த்து பெரிய ஹீரோக்களுக்கு தங்கையாக நடிக்க அழைத்தாலும் சந்தோஷமாக நடிக்கிறார்.
Manipur: நம் தலையில் அல்ல, காட்டுமிராண்டிகளின் தலையில் அடிக்க வேண்டும்: மணிப்பூர் கொடூரம் பற்றி வைரமுத்து ட்வீட்
திருமண வதந்திபடத்திற்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கை நிறைய படங்கள் வைத்திருந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். இதற்கிடையே கீர்த்திக்கும், அவரின் காதலருக்கும் விரைவில் திருமணம் என அவ்வப்போது வதந்தி பரவி வருகிறது. அதை பார்த்து சிரித்துவிட்டு, எனக்கு திருமணம் நடக்கும்போது நான் சொல்கிறேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
வருத்தம்ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நபருடன் திருமணம் என தகவல் வெளியாவதை பார்த்து கீர்த்தியே சிரிக்கிறார். கடைசியாக துபாயை சேர்ந்த தொழில் அதிபருடன் திருமணம் என தகவல் வெளியானது. ஆனால் அந்த நபர் கீர்த்தியின் காதலர் அல்ல நல்ல நண்பர் மட்டுமே. இந்த திருமண வதந்தியால் கீர்த்தியின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். எங்கள் மகளுக்கு திருமணம் நிச்சயமானதும் நாங்களே முறைப்படி அறிவிப்பு வெளியிடுவோம். அதுவரை எங்கள் மகளை சும்மாவிடுங்கள் என கீர்த்தியின் அப்பா சுரேஷ் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.