வரும் ஜூலை 28 ஆம் தேதி ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் குறைந்த விலை S1 Air எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1,09,999 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. அதிகபட்ச வேகம் 95 கிமீ கொண்டுள்ள ஸ்கூட்டரின் IDC ரேன்ஜ் 125 கிமீ ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அறிமுக சலுகை விலை ஜூலை 28 முதல் ஜூலை 30 வரை மட்டும் முன்பாக ஓலா ஸ்கூட்டர் மாடல்களை வைத்திருப்பவர்களுக்கு மற்றும் தற்பொழுது முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே ரூ.10,000 குறைவான விலையில் கிடைக்கும். ஜூலை 31 ஆம் தேதி முதல் ஓலா எஸ்1 ஏர் வாங்குபவர்களுக்கு ரூ.1,19,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Ola Electric S1 Air
S1 ஏர் மின்சார ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. பொதுவாக, 4.5Kw பவரை வெளிப்படுத்துகின்ற ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 90KM/hr ஆகும். 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.
Ola S1 Air Specs | |
Battery Capacity | 3kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 4.5 kW |
Torque (Nm) | 58 Nm |
Top Speed | 90 km/hr |
Range (km) | 125km |
Modes | Eco, Normal, Sports |
Acceleration (0-60Km) | 9.3 Secs |
S1 Pro மாடலை போல அல்லாமல் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டதாக உள்ளது. பீங்கான் வெள்ளை, நியோ மின்ட், கோரல் கிளாம், ஜெட் பிளாக் மற்றும் லிக்விட் சில்வர் என ஐந்து நிறங்களை பெற்றதாக வந்துள்ளது. மற்றபடி, மேலதிக விபரங்கள் ஜூலை 28 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எஸ்1 ஏர் ஸ்கூட்டரின் விநியோகம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளது.