Rajinikanth – விஜய்யை காலி செய்ய லோகேஷை வைத்தே ஸ்கெட்ச் போட்டிருக்கிறாரா ரஜினி?.. அஜித்தும் கூட்டா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) விஜய்யை காலி செய்ய ரஜினிகாந்த் பக்கா ஸ்கெட்ச் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.,

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. இரண்டு சிங்கிள்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடக்கவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். அதன் ஷூட்டிங்கும் சமீபத்தில் முடிவடைந்தது.

மாலத்தீவில் ரஜினி: லால் சலாம் ஷூட்டிங்கை முடித்துவிட்டு குட்டி ரெஸ்ட் எடுப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார். மாலத்தீவிலிருந்து திரும்பிய பிறகு ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ஆட்டம் கண்டிருக்கும் நாற்காலி?: இதற்கிடையே அவர் நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியடைந்தன. இதன் காரணமாக ரஜினியின் சம்பளம் ஜெயிலர் படத்தில் கணிசமாக குறைக்கப்பட்டிருப்பதாகவும்; அதேசமயம் விஜய்யின் சம்பளம் எக்கச்சக்கமாக ஏறியுள்ளதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. அதேபோல் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சையும் அடிக்கடி கேட்க முடிகிறது.

முடிவெடுத்த ரஜினி: சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான் அது ரஜினிதான் என அவரின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஹுக்கும் பாடல் வரிகள்கூட அதைத்தான் உணர்த்தின. மேலும் அந்தப் பாடல் ரிலீஸுக்கு பிறகு விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ளவும் செய்தனர். இந்தச் சூழலில் வெறும் பாடல் வரிகளில் மட்டுமே தன்னை சூப்பர் ஸ்டார் என்று அடையாளப்படுத்தக்கூடாது வசூலிலும் பழையபடி கம்பேக் கொடுத்து நிரூபிக்க வேண்டும் என காத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

ஏன் லோகேஷ் கனகராஜ் படம்?: அதனால்தான் இப்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் எப்படி கமல் ஹாசனை வைத்து 500 கோடி ரூபாய் வசூல் படத்தை கொடுத்தாரோ அதேபோல் தன்னை வைத்தும் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் ரஜினி என கூறுகிறது கோடம்பாக்க வட்டாரம்.

ரஜினி போட்டிருக்கு ஸ்கெட்ச்: சூழல் இப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என தொடர்ந்து குரல்கள் கேட்பதை ரஜினி விரும்பவில்லை. எனவே லோகேஷுடன் தான் இணையும் படத்தின் மூலம் விஜய்யின் சூப்பர் ஸ்டார் கனவை காலி செய்ய ரஜினிகாந்த் ஸ்கெட்ச் போட்டிருப்பதாக பரபரக்கவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது திரைத்துறையில் விஜய்க்கு போட்டியாக கருதப்படும் அஜித்தை இந்தப் படத்தில் களமிறக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும்; அதற்காக லோகேஷ் கனகராஜிடம் விரைவில் ரஜினிகாந்த் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது சாத்தியமா?: லோகேஷ் கனகராஜ் வந்த பிறகு தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டாரர் கலாசாரம் பெருகியிருக்கிறது. எனவே விக்ரம் படத்தில் சூர்யாவை எப்படி நடிக்க வைத்தாரோ அதேபோல் ரஜினி படத்தில் அஜித்தை அவரால் நடிக்க வைக்க முடியும் ஏனெனில் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தையும் இயக்குவேன் என சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் லோகேஷ் பேசியிருந்ததை இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

அதேசமயம் இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு அப்பாற்பட்டவர் அஜித்குமார். அவரைப் பொறுத்தவரை சினிமாவில் நடிப்பதோ மட்டும் சரி. அதைத் தாண்டி திரையுலகில் நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் இருப்பவர். அதனால் இந்தப் பஞ்சாயத்துக்குள் நிச்சயம் அஜித் வரமாட்டார் எனவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.