WI vs IND: கிங் கோலியின் புதிய சாதனை… இதுவரை யாருமே செய்ததில்லை – அதுவும் 500ஆவது போட்டியில்!

West Indies vs India, 2nd Test: டிரினிடாட் மற்றும் டொபாகோவில் அமைந்துள்ள குவின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகள் – இந்திய அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெறும் 100ஆவது சர்வதேச போட்டியாகும். இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நேரடியாக ஒளிப்பரப்படுகிறது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் டாஸை வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க நாளின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோஹ்லி 87* ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இந்தியாவின் மீட்சிக்கு கோலி – ஜடேஜா ஆகியோர் பார்ட்னர்ஷிப் உதவிகரமாக இருந்தது எனலாம்.

குறிப்பாக, தனது 500ஆவது சர்வதேச போட்டியில் பங்கேற்றுள்ள கோலி, இந்த மைல்கல் போட்டியில் அரைசதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனையை வேறு எந்த கிரிக்கெட் வீரராலும் செய்ய முடியவில்லை. கிரிக்கெட் வரலாற்றில் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 10வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். அதுமட்டுமின்றி,  தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் காலிஸின் ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது முன்னணி ரன் எடுத்த வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்தார். 

3⃣0⃣th Test FIFTY for Virat Kohli

He also completes a half-century stand with @imjadeja#TeamIndia inching closer to 240.

Follow the match https://t.co/d6oETzoH1Z#WIvIND pic.twitter.com/yG4z7I4epM

— BCCI (@BCCI) July 20, 2023

500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடுவது குறித்து போட்டிக்கு முன் கோலி கூறுகையில், “இந்தியாவுக்காக இவ்வளவு நீண்ட பயணம் விளையாடியதற்கும், இவ்வளவு நீண்ட டெஸ்ட் வாழ்க்கைக்கும் நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நீங்கள் உழைத்த கடின உழைப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.

முன்னதாக, தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் செஷனில் ஏறக்குறைய நிதானமாக அரைசதம் அடித்தனர். இருப்பினும், இரண்டாவது செஷனில் மேற்கு இந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை கைப்பற்றியது.

That’s Stumps on Day 1 of the nd #WIvIND Test!

Solid show with the bat from #TeamIndia 
 or @imVkohli
 for Captain @ImRo45
 for @ybj_19
for @imjadeja

We will see you tomorrow for Day action!

Scorecard https://t.co/d6oETzoH1Z pic.twitter.com/FLV0UzsKOT

— BCCI (@BCCI) July 20, 2023

ஜேசன் ஹோல்டரிடம் 74 பந்துகளில் 57 ரன்களை எடுத்த ஜெய்ஸ்வால் முதல் செஷனில் விக்கெட்டை தவறவிட்டார். இந்தியா அணியின் தொடக்க பார்ட்னர்ஷிப் 139 ரன்களில் உடைந்தது. ரோஹித் 143 ரன்களில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு முன் ஷுப்மான் கில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். தேநீர் இடைவேளை நெருங்கும் வேளையில் ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி முதல் நாள் ஆட்டநேரமுடிவில் 288 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.