இப்படியுமா சாவு வரணும்! 210 கிலோ எடையை தூக்க முயன்றபோது ஷாக்! ஒரே நொடியில் உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்

பாலி: வெறும் 33 வயதே ஆன ஜஸ்டின் விக்கி என்ற இன்ஸ்டாகிராம் ஃபிட்னஸ் பிரபலம் உடற்பயிற்சி செய்த போதே திடீரென துடிதுடித்து உயிரிழந்த ஷாக் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

இந்த நவீன காலத்தில் நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் நமது உடல்நிலையில் சில தவிர்க்கவே முடியாத பாதிப்புகள் ஏற்படுகிறது. உடல் உழைப்பு இல்லாமல் போவதாலேயே இது ஏற்படுகிறது.

இதைச் சரி செய்யப் பலரும் ஜிம்மிற்கு செல்கிறார்கள். உடற்பயிற்சி செய்வது நல்லதுதான் என்றாலும் அதை ஓவராக செய்தாலும் முறையான பயிற்சி இல்லாமல் செய்தாலும் அது பேராபத்தையே ஏற்படுத்தும்.

மோசமான விபத்து: அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் ஜஸ்டின் விக்கி. 22 வயதான இவர் அங்கே ஃபிட்னஸ் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் தினசரி பல மணி நேரம் ஜிம்மிலேயே உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். உடலை அந்தளவுக்கு ஃபிட்டாக வைத்திருக்க அவர் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்வாராம். அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.

அப்போது அதிக எடையைத் தூக்க முயன்ற போது எதிர்பாராத அவரது கழுத்து உடைந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 15ஆம் தேதி அவர் பாலியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அரங்கேறியுள்ளது.

ஷாக் வீடியோ: அந்த விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட பயங்கரமான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் ஜஸ்டின் விக்கி அதீத எடையைக் கழுத்தின் பின்புறம் வைத்து தனது தோள்களில் தூக்க முயல்கிறார். அவர் கீழே உட்கார்ந்த போதிலும், அவரால் அந்தளவுக்கு எடையை வைத்து கொண்டு எழுந்திருக்க முடியவில்லை. அப்போது எதிர்பாராத விதமாக அந்த எடை அவரது கழுத்தின் பின்புறத்தில் பலமாக இடித்து அவரை தள்ளுகிறது.

இதனால் அவர் அப்படியே உட்கார்ந்த நிலையில் கீழே விழுந்தார். பின்னால் அவரது உதவிக்கு இருந்த ஸ்பாட்டராலும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. அவரும் நிலைதடுமாறி பின்னால் விழுந்துவிட்டார். ஸ்பாட்டர் என்பவர் பளு தூக்குதலின் போது உதவிக்குப் பின்னால் நிற்கும் நபர் ஆவர். இதில் விக்கியின் கழுத்து உடைந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 Indonesia Gym Trainer Dies After Weight Falls On Neck During Squat

210 கிலோ எடை: ஜஸ்டின் விக்கி 210 கிலோ எடையைத் தூக்க முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் அவரது கழுத்து உடைந்துள்ளது. அவரது இதயம் மற்றும் நுரையீரலை இணைக்கும் முக்கிய நரம்புகளில் அதீத அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து நடந்த உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவருக்கு அங்கு அவசர ஆப்ரேஷன் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. ஆப்ரேஷனுக்கு பிறகும் கூட கொஞ்ச நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அவரை பின்தொடர்வார்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மோசமான விபத்தின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. மேலும் அவரது மரணத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.