கங்குவா படத்திற்காக இரண்டரை மணி நேரம் மேக்கப் போடும் சூர்யா
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் சூர்யா. நாளை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அங்கு சரித்திர கால கெட்டப்பில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த சரித்திர கால கெட்டப்பில் நடிப்பதற்காக தினமும் சூர்யாவுக்கு இரண்டரை மணி நேரம் மேக்கப் போடப்பட்டு வருகிறது. அதோடு ஒவ்வொரு நாளும் முதல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு அதிகாலை 6:00 மணிக்கே எழுந்து ரிகர்சல் பார்க்கும் சூர்யா, படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சில கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வருவதாகவும் கங்குவா படக்குழுவினர் கூறுகிறார்கள்.