அதிகம் விற்பனையாகும் கார்: பண்டிகை காலம் வந்துகொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் பலர் கார் வாங்க திட்டமிட்டுக்கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் எந்த காரை அதிகமாக மக்கள் வாங்கினார்கள், எந்த கார்கள் அதிக தரம் வாய்ந்த கார்களாக உள்ளன என்பது போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பது இயல்பான ஒரு விஷயமாகும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ஜூன் மாத கார் விற்பனை
ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்களில் மாருதி சுஸுகி 6 கார்களையும், ஹூண்டாய் 2 கார்களையும், டாடா மோட்டார்ஸ் 2 கார்களையும் கொண்டுள்ளன. இதில் வேகன்ஆர், ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா, ஆல்டோ மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகியவை அடங்கும். இந்தப் பட்டியலைப் பார்த்து, எந்தக் கார் உங்களுக்குச் சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். முதல் 10 கார்களின் பட்டியலில் பல பெரிய ஏற்ற இறக்கங்கள் உள்ளன.
அதிகம் விற்பனையான கார்கள்
மாருதி சுஸுகியின் வேகன்ஆர்
ஜூன் 2023 இல் மாருதி சுஸுகியின் வேகன்ஆர் சிறந்த விற்பனையான காராக முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இதன் விற்பனை 9 சதவீதம் குறைந்துள்ளது. அதன் 17,481 யூனிட்கள் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 19,190 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன.
மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட்
அதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட் உள்ளது. இதன் விற்பனையும் கடந்த ஆண்டை விட 2 சதவீதம் குறைந்துள்ளது. ஸ்விஃப்ட் மொத்தம் 15,955 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி -களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் விற்பனை கடந்த ஆண்டை விட 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த எஸ்யூவி 14,447 யூனிட் விற்பனையை பதிவு செய்துள்ளது.
மாருதி சுஸுகி பலேனோ , டாடா நெக்ஸான்
மாருதி சுஸுகி பலேனோ நான்காவது இடத்திலும், டாடா நெக்ஸான் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. பலேனோ கடந்த மாதம் 14,077 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, அதே நேரத்தில் நெக்ஸான் 13,827 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
மீதமுள்ள கார்கள்
ஹூண்டாய் கடந்த மாதம் ஆறாவது இடத்தில் இருந்தது. இதன் விற்பனை 11,606 யூனிட்கள், ஆண்டு வளர்ச்சி 12 சதவீதம். மாருதி சுஸுகி ஆல்டோ ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது 11,323 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. டாடா பன்ச் ஜூன் 2023 இல் மொத்தம் 10,990 யூனிட்களுடன் எட்டாவது இடத்தில் இருந்தது. மீதமுள்ள இடங்களில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா ஒன்பதாவது இடத்தில் உள்ளது மற்றும் கிராண்ட் விட்டாரா பத்தாவது இடத்தில் உள்ளது.
ஜூன் 2023 இல் அதிகம் விற்பனையான முதல் 10 கார்களின் பட்டியல்:
மாருதி சுஸுகி வேகன்ஆர் – 17,481 யூனிட்கள்
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் – 15,955 யூனிட்கள்
ஹூண்டாய் க்ரெட்டா – 14,447 யூனிட்கள்
மாருதி சுஸுகி பலேனோ – 14,077 யூனிட்கள்
டாடா நெக்ஸான் – 13,827 யூனிட்கள்
ஹூண்டாய் வென்யூ – 11,323 யூனிட்கள்
மாருதி சுஸுகி ஆல்டோ – 11,323 யூனிட்கள்
டாடா பஞ்ச் – 10,990 யூனிட்கள்
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா – 10,578 யூனிட்கள்
மாருதி கிராண்ட் விட்டாரா – 10,486 யூனிட்கள்