கிருபா முனுசாமி புகார் : விசாரணை வளையத்தில் விக்ரமன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மற்றும் பிக்பாஸ் பிரலம் விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்ற பெண் பாலியல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். வழக்கறிஞரான கிருபா முனுசாமி ஏன் விக்ரமன் மீது போலீஸ் புகார் அளிக்கவில்லை? என்று கேட்டு விக்ரமன் மீது வீண் பழி போடுவதாக பலரும் அவரை விமர்சித்தனர்.

இதுகுறித்து அண்மையில் பேட்டி அளித்த கிருபா, விக்ரமன் தன்னிடம் கெஞ்சி அழுததால் கட்சியில் மட்டுமே புகார் அளித்ததாகவும், ஆனால் கட்சியிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சோஷியல் மீடியாவில் விக்ரமனை அம்பலப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றைய தினமே கிருபா முனுசாமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கிருபா தனது புகாரில், 'விக்ரமன் என்னை காதலிப்பதாக கூறி பாலியல் ரீதியாகவும், பண வாங்கியும் மோசடி செய்துள்ளார். தற்போது வேறொரு பெண்ணை காதலித்து வருகிறார். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி என்பதால் முதலில் கட்சியில் புகார் அளித்தேன். என்னிடம் வாங்கிய 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயில், 12 லட்சம் ரூபாய் பணத்தை மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். அவர் மீது கட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எனக்கு மன உளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே, இதில் போலீஸார் தலையிட்டு விக்ரமனை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

கிருபாவின் புகாரை அடுத்து போலீஸின் விசாரணை வளையத்தில் விக்ரமன் உள்ளார். விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக அவர் விசாரிக்கப்படலாம் என தெரிகிறது.

தேவைப்படும்போது மானே தேனே காரியம் முடிந்த பின் கெட்டவார்த்தை
இதனிடையே விக்ரமன் பற்றி கிருபா கூறுகையில், ‛‛விக்ரமன் இன்று வாய்க்கு வந்தபடி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நடந்த உண்மையை யாராலும் மறைக்க முடியாது. பத்தாண்டுகளுக்கு முன் நாங்கள் நண்பர்களாக தான் பழக ஆரம்பித்தோம். ஆனால், நாளடைவில் நட்பு காதலாக மாறியது. அவர் கல்யாணம் செய்யும் நோக்கத்தில் என்னுடன் பழகவில்லை என்று சொல்கிறார். வாட்சப் சேட்-ஐ பார்த்தாலே உண்மை எதுவென உங்களால் புரிந்து கொள்ள முடியும். நான் லண்டனில் இருந்தபோது என்னை பார்ப்பதற்கே விசா அப்ளை செய்தார். ஆனால் கிடைக்கவில்லை. என்னிடம் தேவைப்படும்போதும், பணம் வாங்கும்போதும் மானே தேனே ஐ லவ் யூ என்றெல்லாம் பேசுவார். இப்போது இல்லை என்று பொய் சொல்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெயர் புகழ் கிடைக்க ஆரம்பித்தது. அத்துடன் கட்சியிலும் பொறுப்பு கிடைத்தது. அதற்குபிறகு தான் என்னை அவாய்ட் செய்ய ஆரம்பித்தார்.

அவர் என்னை ஏமாற்றும் நோக்கில் பழகுகிறார் என்று தெரிந்தவுடன் முதலில் போலீஸ் புகார் அளிக்கதான் முயற்சி செய்தேன். அதற்குள் அதை தெரிந்து கொண்ட அவர் மூன்று மாதங்களுக்கு முன் என்னை தொடர்பு கொண்டு போலீஸில் புகார் அளிக்க வேண்டாம் என்று கதறி அழுதார். ஒருகட்டத்தில் யாராலும் என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டவும் செய்தார். நான் விசிக உறுப்பினராக இல்லாவிட்டாலும் அந்த கட்சியின் அபிமானி. எனவே, அந்த நோக்கில் தான் கட்சியிடம் புகார் அளித்தேன். ஆனால், பயன் இல்லை. திருமாவளவனையே நேரில் சந்தித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே தான் ட்விட்டரில் இதுகுறித்து பேச வேண்டிய நிலைமைக்கு வந்தேன்' என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.