சென்னை: திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை 23) பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மேகதாட்டு அணை விவகாரம், அனைவருக்கும் பெண்கள் உரிமைத் தொகை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, அத்தியாவசியப் பொருட்கள், மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவை தொடர்பாகவும், திமுகவைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
மாநகராட்சி வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.