மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக வெளியான வீடியோக்கள் அம்மாநிலத்தில் இனப்படுகொலை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மே 4 ம் தேதி தலைநகர் இம்பால் அருகே இரண்டு பெண்களை நிர்வாணபப்டுத்தி ஊர்வலமாக இழுத்துச்சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த வன்முறை கும்பல் குறித்த வீடியோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுரசாந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லாம்ஜா […]