மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்: தமிழ் வழி கல்வியில் இயங்கப் போகும் சிபிஎஸ்இ பள்ளிகள்!

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆங்கிலம், இந்திக்கு அடுத்தபடியாக தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இமானுவேல் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இந்திய மொழிகளை பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாணவர்கள், மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஆசிரியரை நியமிக்க கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

வானதி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள் தமிழ் மொழி மீதும் மாநில மொழிகளின் மீதும் கொண்டிருக்கும் அளவற்ற மரியாதை மற்றும் அக்கறையின் விளைவாக சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இனி தங்கள் தாய் மொழியிலேயே மேல்நிலை கல்வி வரை பயிலலாம். இதனால் தமிழ் மொழி மற்றும் இந்தியாவின் பிற மொழிகளின் மூலம், கல்வி வலிமை பெரும். மாநில மொழிகள் மீதான பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் அபிமானத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

இதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள 7500 சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சுமார் 7500 தமிழாசிரியர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களும் தமிழ் மொழி கற்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்!

தமிழாசிரியர்களின் வேலை வாய்ப்பையும், மாணவர்களின் அறிவுத்திறனையும், படைப்பாற்றலையும், தாய் மொழி மீதான ஈடுபாட்டையும் வளர்க்கும் இந்த திட்டத்தை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.