மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருவதால் ரெட் மற்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொட்டும் கனமழைமகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக மும்பை, தானே, ராய்காட், பால்கர், ரத்தினகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மும்பையின் தாழ்வான பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெங்களூரு குடிநீர் தேவை போக மீதமே தமிழகத்திற்கு… டிகே சிவகுமார் தகவல்!
அந்தேரி சப்வே மூடல்மும்பை அந்தேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அந்தேரி சப்வே மூடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பை நகர் பகுதி மட்டுமின்றி நகர் பகுதியிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய வானிலை மையம் பால்கர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் மூளையை திண்ணும் அமீபாவுக்கு 2 வயது குழந்தை பலி… பீதியில் உறைந்த மக்கள்!வெளியே வர வேண்டாம்
மேலும் மும்பை, தானே, ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் கனமழை கொட்டி வருகிறது. இன்றும் கனமழை தொடரும் என்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளையும் கனமழை பெய்யும்புனே மாவட்டம், கொங்கன் மற்றும் மத்திய மகாராஷ்டிராவின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இனற் ‘கனமழை முதல் மிக கனமழை’ என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மும்பை உட்பட மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளில் நாளையும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதியோர், ஆதரவற்றோருக்கான உதவித்தொகை உயருகிறதா? ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தெலுங்கானாவில் தொடரும் கனமழையால் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேசக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தெலுங்கானா மற்றும் வடக்கு ஆந்திராவில் கனமழை வெளுத்து வருகிறது. ஹைத்ராபாத் நகரின் பல்வேறு சாலைகளிலும் மழை நீர் ஆறுபோல் ஓடுகிறது. தொடர் கனமழையால் தெலுங்கானாவிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.