ஸ்டாலினுக்கு அந்த பயம்… போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு ஏ வகுப்புக்கான சலுகைகள் கொடுக்கப்படலாம், அவர் வருமான வரி கட்டுகிறார் என்பதால் அவருக்கு ஏ வகுப்பு சலுகைகள் கொடுக்கப்படும்.

ஆனால் சிறை கைதியான செந்தில் பாலாஜிக்கு டிஐஜி, கண்காணிப்பாளர், ஜெயிலர் உள்ளிட்டோர் சல்யூட் அடிப்பதாக தகவல்கள் வருகிறது. மருத்துவமனைக்கு அருகிலேயே வசந்த மாளிகை போல் சகல சலுகைகளுடன் செந்தில் பாலாஜிக்கு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யாரும் உள்ளே போக முடியாது என்பதால் இத்தனை சலுகைகளும் அவருக்கு வழங்கப்படுகிறது.

அமலாக்கத்துறைதான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜியை ஏன் திமுக பாதுகாக்க வேண்டும்? சிறை கைதிக்கு எதற்கு அமைச்சர் பதவி? மக்கள் பணத்தில் செலவு ஏன்?

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஸ்டாலினுக்கு தில்லு தைரியம் தெம்பு திரானி உள்ளதா?

வீட்டுல தக்காளி சாப்பாடு கிடைக்கல

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாத போது 12 பேரை தனது அமைச்சரவையில் இருந்து நீக்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தவறு செய்தவர்களை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கியிருக்கிறார். ஸ்டாலினுக்கு அப்படி செய்ய தைரியம் இருக்கிறதா?

செந்தில்பாலாஜியை நீக்கினால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயம்தான் ஸ்டாலினுக்கு.

செந்தில் பாலாஜிக்கு எல்லாம் தெரியும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் அவர் ஏக்நாத் ஷிண்டேவாக மாறலாம் என்ற பயத்தில்தான் ஸ்டாலின் அவரை நீக்கவில்லை என்று சரமாரியாக தாக்கினார். மேலும் தேர்தல் வாக்குறுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள்.

அப்படி என்றால் 2 கோடியே 15 லட்சம் பேருக்கும் கொடுக்க வேண்டியதுதானே? இப்போது டோக்கன் சிஸ்டத்தில் தகுதி அடிப்படையில் 1000 ரூபாய் வாங்க 1008 கண்டிஷன் போட்டுள்ளார்கள். இது நிச்சயமாக மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.