சென்னை: கூந்தலை காற்றில் அலைபாயவிட்டு, நெற்றியில் வட்ட பொட்டுவைத்து மௌமான நேரம் என்ற பாடலின் மூலம் மனதை வசீயம் செய்த நடிகை ஜெயபிரதாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்கமுடியாது.
பாலிவுட்,கோலிவுட், டோலிவுட் என ஒரு கலக்கு கலக்கி வந்த ஜெயப்பிரதா, அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
பல மொழியில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயப்பிரதா அரசியலில் குதித்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார்.
வெறும் 10 ரூபாய் சம்பளம்: கிளாசிக்கல் நடனக் கலைஞரான ஜெயப்பிரதாவின் கண்ணே ஆயிரம் கதை பேசும், சினிமா வட்டாரத்தில் கண் அழகி என்ற மற்றொரு ரகசிய பெயரும் இவருக்கு உண்டு. இவர் தனது 13 வயதில் பூமிகோசம் என்ற தெலுங்கு படத்தில் முதல் முதலாக அறிமுகம் ஆனார். முதல் படத்தில் இவரின் முதல் சம்பளம் வெறும் 10 ரூபாயாம். இதை ஜெயப்பிரதாவே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
அடுத்தடுத்த ஹிட் படங்கள்: 13வயது பருவமங்கையான சினிமாவிற்குள் நுழைந்த ஜெயப்பிரதா, தமிழில் அறிமுகமானதே கே பாலச்சந்தர் இயக்கிய மன்மதலீலை படத்தில் தான். திரையரங்கில் பல நாட்கள் ஓடிய இத்திரைப்படம் நன்றாக கல்லாக்கட்டியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, 47 நாட்கள், ஏழை ஜாதி உள்பட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் ஜெயப்பிரதா நடித்துள்ளார்.
3 குழந்தைகளின் அப்பா: பல மொழிப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்த ஜெயப்பிரதா, திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நஹதா திருமணம் செய்து கொண்டார். ஜெயபிரதாவை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீகாந்த் நஹதாவிற்கு ஏற்கனவே மனைவியும் 3 குழந்தைகளும் இருந்த நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஜெயப்பிரதாவை திருமணம் செய்து கொண்டதால், இவரது திருமண வாழ்க்கை சர்ச்சைக்குள்ளானது.
பல கோடி சொத்து: திருமணத்திற்கு பிறகும் மும்பையில் செட்டிலான ஜெயப்பிரதா இந்தி திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால், கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதை அடுத்து, தசவதாரம் படத்தில் நடித்தார். தனது 13 வயதில் வெறும் பத்து ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயப்பிரதா, குறுகியாக காலத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறினார். ஜெயப்பிரதாவின் சொத்து மதிப்பு 65 கோடி என தேர்தலில் போட்டியிடும் போது கொடுத்த விண்ணப்பத்தின் குறிப்பிட்டு உள்ளார்.