400 ஆண்டுகள் பழமையான மசூதிகள்.. உடனே அகற்றுமாறு ரயில்வே அதிரடி நோட்டீஸ்.. அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்!

டெல்லி:
400 ஆண்டுகள் பழமையானதும், மிகவும் புகழ்பெற்றதுமாக விளங்கும் இரண்டு மசூதிகளை உடனே அகற்றக் கோரி ரயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள பெங்காலி மார்க்கெட் மசூதியும், பாபர் ஷா டாக்கியா மசூதியும் மிகவும் புகழ்பெற்றது ஆகும். வெள்ளிக்கிழமைகளில் மட்டுமல்லாமல் தினந்தோறுமே இந்த மசூதிகளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் வந்து தொழுகை செய்வது வழக்கம். இவற்றில் பாபர் ஷா மசூதி 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.

இந்நிலையில், இந்த இரண்டு மசூதிகளுக்கும் வடக்கு ரயில்வே சார்பில் நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், “ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருக்கும் மசூதிகளை இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். அப்படியில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ரயில்வே இறங்கும். அந்த சமயத்தில், ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கு மசூதி நிர்வாகங்களே பொறுப்பு” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கவர்னர் என்றால் நிறைய வேலைகள் இருக்கும் என்ற மாயை உள்ளது”.. சடாரென ஒப்புக்கொண்ட ஆளுநர் ரவி

ரயில்வேயின் இந்த நோட்டீஸ் டெல்லியில் உள்ள முஸ்லிம்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாபர் ஷா டாக்கியா மசூதியின் செயலாளர் அப்துல் கஃப்பார் கூறுகையில், “இந்த இரண்டு மசூதிகள் பல நூறு ஆண்டுகளாக இங்கு இருக்கின்றன. டெல்லியின் பாரம்பரிய சின்னங்களாகவும் இவை விளங்குகின்றன. இப்போது திடீரென மசூதிகளை அகற்ற கூறுவது வருத்தமாக இருக்கிறது” என்றார்.

மருத்துவர்கள் அறையில் செந்தில் பாலாஜி.. சீருடையின்றி சந்தித்த டிஐஜி.. சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்

இந்தியாவில் உள்ள அனைத்து மசூதிகளும் இடிக்கப்படும் என கர்நாடகா முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா அண்மையில் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.