வெற்றிப்பாதைவலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் துணிவு படத்தின் மூலம் கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார் அஜித். அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் அஜித்திற்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தந்தது. இதையடுத்து அதே வேகத்தில் அஜித் தன் அடுத்த படத்தில் நடிக்க தயாரான நிலையில் எதிர்பாராத விதமாக பல விஷயங்கள் நடந்து, அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவக்கப்படாமல் இருக்கின்றது. இருந்தாலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகின்றது
விடாமுயற்சிதுணிவு படத்திற்கு பிறகு அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். என்னதான் இதைப்பற்றிய தகவல் கடந்த ஜனவரி மாதமே வெளியானாலும் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி தான் விடாமுயற்சி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மே மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை படப்பிடிப்பு துவங்காமலே இருக்கின்றது. இதன் காரணமாக விடாமுயற்சி திரைப்படம் நடக்குமா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக நடக்கும் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
தயாராகும் அஜித்விடாமுயற்சி படத்திற்காக அஜித் தற்போது தீவிரமாக தயாராகி வருவதாக தகவல்கள் வருகின்றன. அஜித் தன் உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறி வருகின்றார். அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் அஜித் செம பிட்டாக இருப்பதாக அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கமன்ட் அடித்து வருகின்றனர். இதையடுத்து விடாமுயற்சி படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரகளில் நடிப்பதாகவும், மங்காத்தா படத்தை போல ஹீரோ மற்றும் வில்லன் என அஜித் இரு ரோலில் நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த பல படங்களாக சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் வரும் அஜித் விடாமுயற்சி படத்திற்காக தன் லுக்கையும் டோட்டலாக மாற்ற இருக்கிறாராம்
அன்றே கணித்த அஜித்இந்நிலையில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அஜித் கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தை பற்றி பேசியது தான் தற்போது செம வைரலாக போய்க்கொண்டிருக்கின்றது. அதாவது ஒரு பேட்டியில் பேசிய அஜித், எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஐம்பது ஓவர் போட்டிகள் குறைந்து இருபது ஓவர் மற்றும் பத்து ஓவர் போட்டிகள் தான் அதிகம் நடைபெறும்.. ரசிகர்கள் அதைத்தான் விரும்புவார்கள். தற்போது இருக்கும் காலகட்டத்தில் ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக 3 மாய் எரம் ஒதுக்குவதே அரிதான விஷயமாக இருக்கின்றது.எனவே எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிலும் இதுபோல பல மாற்றங்கள் நிகழும் என அஜித் கூறியுள்ளார். அவர் கூறியபடியே தற்போது கிரிக்கெட் போட்டிகள் மாறியுள்ளது.இதையடுத்து பலரும் இந்த விடியோவை ஷேர் செய்து அன்றே கணித்த அஜித் என அவரை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது