Apollo Cancer Centre: தெற்கு ஆசியாவிலேயே மிக நவீன சைபர்நைஃப்® ரோபோட்டிக் ரேடியோ அறுவை சிகிச்சை!

புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலம்: தெற்காசியாவில் புற்றுநோய் சிகிச்சையை மறுவரையறை செய்யும் மிக நவீன தொழில்நுட்பம் இதுவே. 

  • உடலின் எந்த பகுதியிலும் மி.மீட்டருக்கும் குறைவான துல்லியத்துடன் சரியான இடத்தில் மிகத் துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சையை வழங்க நவீன மென்பொருள், மேம்பட்ட இமேஜிங் திறன் மற்றும் உயர்நிலை ரோபோட்டிக்ஸ் 

  • அறுவைசிகிச்சை செய்ய இயலாத புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க நிகரற்ற அணுகுமுறையான இது, விரைவிலேயே நோயாளிகள் மீண்டு குணமடைய ஏதுவாக்குவதுடன் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மிகச்சிறப்பாக மேம்படுத்துகிறது. 

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்.

சுகாதார பராமரிப்பில் மற்றுமொரு புதுயுகத்தை கொண்டு வரும் வகையில் அப்போலோ கேன்சர் சென்டர், சென்னை தெற்காசியாவின் முதல் சைபர்நைஃப் என்பதை அறிமுகம் செய்திருக்கிறது. 

சைபர்நைஃப்® S7™ FIM ரோபோட்டிக் ரேடியோ சர்ஜரி சிஸ்டம் என அழைக்கப்படும் இது, புற்றுக்கட்டிகளுக்கும் மற்றும் புற்று அல்லாத பிற கட்டிகளுக்கும் புரட்சிகர சிகிச்சை வழிமுறையை வழங்குகிறது.  சைபர்நைஃப்® S7™ FIM ரோபோட்டிக் ரேடியோ சர்ஜரி சிஸ்டம் என்ற இச்சாதனத்தை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார். 

அப்போலோ கேன்சர் சென்டர் – திரு. தங்கம் தென்னரசு

சிறப்பான இத்தொடக்கவிழா நிகழ்வில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் செயலாக்க துணைத்தலைவர் டாக்டர். ப்ரீத்தா ரெட்டி, இதன் குழும புற்றுநோயியல் மற்றும் இன்டர்நேஷனல் இயக்க செயல்பாடுகளுக்கான இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி, இத்துறையின் தலைவர் திரு. தினேஷ் மாதவன் மற்றும் மருத்துவர்கள் முன்னிலை வகித்தனர்.  

புற்றுநோய் கட்டிகளுக்கும், புற்றுநோய் அல்லாத கட்டிகளுக்கும் மற்றும் கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகின்ற பிற பாதிப்பு நிலைகளுக்கும் உடலில் ஊடுருவல் இல்லாத சிகிச்சைக்கான சாதனமே சைபர்நைஃப்® S7™ FIM சிஸ்டமாகும். மூளை, முதுகுத்தண்டு, புராஸ்டேட் மற்றும் அடிவயிறு புற்றுநோய்கள் உட்பட, உடல் நெடுகிலும் உள்ள பாதிப்பு நிலைகளுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படுகிறது.  அறுவைசிகிச்சை செய்ய இயலாத அல்லது அறுவைசிகிச்சை ரீதியாக மிக சிக்கலான புற்றுக்கட்டிகள் உள்ள

நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சைக்கு ஒரு மாற்று வழிமுறையாக இது இருக்கக்கூடும்.  கதிர்வீச்சின் மூலம் முன்பு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலும், பிற பகுதிகளுக்கு பரவுகின்ற புற்று நைவுப் புண்கள் அல்லது திரும்பத் திரும்ப வரும் புற்றுநோயுள்ள நோயாளிகள் கூட இச்சிகிச்சையைப் பெறலாம்.    

கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். மகாதேவ் போத்தராஜு ‘‘சைபர்நைஃப்®’’ சிகிச்சை குறித்து விளக்குகையில், ‘‘சைபர்நைஃப்® S7™ FIM சிகிச்சைகள்,  இந்த சிகிச்சைக்கான காலஅளவு பொதுவாக 30 முதல் 90 நிமிடங்கள் வரை இருக்கலாம்.  இந்நேரத்தில் பல்வேறு கோணங்களிலிருந்து 100 முதல் 200 கதிர்வீச்சு கற்றைகள் செலுத்தப்படுகின்றன.  ஒவ்வொரு கற்றையும் ஏறக்குறைய 10 முதல் 15 விநாடிகள் வரை நீடிக்கும். இந்த சிகிச்சை அமர்வுகள் உடலில் ஊடுருவல் அல்லாத வெளிநோயாளிக்கான செயல்முறைகளாக மேற்கொள்ளப்படுகின்றன. உணர்விழப்பு மருந்தோ அல்லது உடலில் கீறல்களோடு இதற்கு தேவைப்படாது.  இதனால் இந்த சிகிச்சை நடைபெறும் காலகட்டத்தில் பெரும்பாலான நோயாளிகளால் அவர்களது தினசரி செயல்பாடுகளை வழக்கம்போல தொடர்ந்து மேற்கொள்ள இயலும்’’ என்று கூறினார்.

அப்போலோ கேன்சர் சென்டர்

கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் சங்கர் வங்கிபுரம் பேசுகையில், ‘‘சைபர்நைஃப்® S7™ FIM, வேகத்தையும், துல்லியத்தையும் ஒருங்கிணைத்து கதிர்வீச்சு சிகிச்சை எதிர்காலத்தையே மறுவரையறை செய்கிறது. தீங்கற்ற மூளைக்கட்டிகள், மூளையில் பரவியுள்ள புற்றுக்கட்டிகள் உட்பட பல்வேறு நோய்ப்பாதிப்பு நிலைகளுக்கு மிகத்துல்லியமான SRS/SBRT சிகிச்சைகளை வழங்குவதற்கு செயற்கை நுண்ணறிவால் நிகழ்நேரத்தில் இலக்கை சரியாக கண்டறியும் திறன்மிக்க சிகிச்சை முறையாக இது இருக்கிறது. உட்கை நரம்பு வாதங்கள், பொத்து தலைவலிகள், உடல் நடுக்கங்கள், மூளை நைவுப்புண்ணால் ஏற்படும் கால்கை வலிப்பு மற்றும் மண்டை ஓட்டில் அறுவைசிகிச்சையால் சரி செய்ய இயலாத சில நேர்வுகள் (மருத்துவ அல்லது தொழில்நுட்ப காரணங்களினால்), நுரையீரல், கணையம், கல்லீரல், புராஸ்டேட் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும், தலை மற்றும் கழுத்தில் திரும்பத்திரும்ப வரும் புற்றுநோய்களுக்கும் சைபர்நைஃப் சிகிச்சையை பயனளிக்கும் வகையில் வழங்க முடியும்’’ என்று கூறினார்.

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, இத்தொடக்க விழா நிகழ்வில் ஆற்றிய உரையில் கூறியதாவது:

“தொழில்நுட்பத்தில் நவீன மேம்பாடுகளின் வழியாக, உடல்நல பராமரிப்பு துறையில் தமிழ்நாடு புதிய சிகரங்களை எட்டுவது மனநிறைவளிக்கிறது.  உலகெங்கிலுமிருந்து வரும் நோயாளிகளுக்கு நவீன, மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதில் உள்ள அர்ப்பணிப்பு உணர்வுக்கும் மற்றும் சீரிய முயற்சிகளுக்கும் அப்போலோ கேன்சர் சென்டரை நான் மனமார பாராட்டுகிறேன்.  புற்றுநோய் சிகிச்சை மற்றும் தொழில்நுட்பத்தில் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வரும் சிறப்பான தருணமாக இந்நிகழ்வு இருக்கிறது.  நோயாளிகளுக்கு சிறப்பான பலன்களை வழங்குகின்ற இந்த புரட்சிகர தொழில்நுட்பத்தை தெற்காசியாவில் அறிமுகம் செய்யும் முதல் மருத்துவ மையமாக இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் உடல்நல பராமரிப்பு துறையில் ஒரு புதிய தரநிலையை அப்போலோ கேன்சர் சென்டர் நிறுவியிருக்கிறது என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.” 

தங்கம் தென்னரசு

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் – ன் செயலாக்க துணைத்தலைவர் டாக்டர். ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், “தங்களது நம்பிக்கையின் மூலம் எங்களை தேடிவரும், எங்களது பாசத்திற்குரிய நோயாளிகளுக்கு இன்னும் அதிக துல்லியத்துடன் தனிப்பயனாக்கப்பட்ட, பயனளிக்கும் புற்றுநோய் சிகிச்சைகளை வழங்குவதற்கான எமது செயல்திட்டத்தில் நவீன சைபர்நைஃப்® S7™ FIM  ரோபோட்டிக் ரேடியோ சர்ஜரி சிஸ்டம் நிறுவப்பட்டிருப்பதன் வழியாக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் ஒரு முக்கியமான முன்னெடுப்பை மேற்கொண்ருக்கிறது.  கடந்த 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான எமது அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியை பெறுவதில் நாங்கள் முன்னணியில் இருந்து வருகிறோம்; நாங்கள் வழங்கும் சிகிச்சை நடைமுறைகளை தொடர்ந்து புரட்சிகரமாக மாற்றி வந்திருக்கிறோம்.

இந்தியாவிலும் மற்றும் பிற நாடுகளிலும் உள்ள எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையில் இப்புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தப்போகும் நேர்மறை தாக்கத்தை நினைத்துப் பார்க்கும்போது தெற்கு ஆசியாவில் இவ்வகையினத்தில் முதன் முறையாக இந்த முன்னோடித்துவ தொழில்நுட்பத்தின் அறிமுகம், நேர்மறையான நம்பிக்கை உணர்வால் எங்கள் மனதை நிரப்பியிருக்கிறது.” என்று குறிப்பிட்டார். 

ஹாஸ்பிடல்ஸ்

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் – ன் குழும புற்றுநோயியியல் மற்றும் இன்டர்நேஷனல் செயல்பாடுகள் துறையின் இயக்குனர் – இயக்கச் செயல்பாடுகள், திரு. ஹர்ஷத் ரெட்டி, இந்நிகழ்வில் பேசுகையில், “தெற்கு ஆசியாவின் முதல் மற்றும் மிக நவீன சைபர்நைஃப்® ரோபோட்டிக் ரேடியோ சர்ஜரி சிஸ்டம் – ஐ சென்னையிலுள்ள அப்போலோ கேன்சர் சென்டரில் அறிமுகம் செய்திருப்பது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு அடிப்படை மாற்றத்தை குறிக்கிறது. இந்நோய்க்கு எதிரான எமது யுத்தத்தில் மேம்பட்ட பலன்களை வழங்குவதற்கு நிகரற்ற துல்லியத்துடன், பிரத்யகமான சிகிச்சை முறைகள் என்ற புதுயுகத்தை இது உருவாக்கவிருக்கிறது.” என்று கூறினார். 

சைபர்நைஃப் சிஸ்டம் என்பது, நேரியல் முடுக்கி என அழைக்கப்படும் ஒரு கதிர்வீச்சு வழங்கல் சாதனத்தை கொண்டிருக்கும் ஒரே கதிர்வீச்சு சிகிச்சை வழங்கல் அமைப்பு முறையாகும்.  கதிர்வீச்சு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் போட்டான்கள் அல்லது அதிக ஆற்றலுள்ள எக்ஸ்-ரேக்களை வழங்குவதற்கு ஒரு ரோபோ மீது இச்சாதனம் பொருத்தப்பட்டிருக்கிறது.  நிகழ்நேர உருவப்பட வழிகாட்டலையும் மற்றும் ஆயிரக்கணக்கான கற்றை கோணங்களிலிருந்து மருந்தினை வழங்க ஒரு ரோபோவை பயன்படுத்துகிறது.  இதன் வழியாக உடலின் எந்தவொரு இடத்திலும் மருந்து வழங்கலில் துல்லியத்திற்கு ஒரு புதிய செந்தரத்தை இது நிறுவுகிறது. 

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்.

கடந்த 15 ஆண்டுகளாக சைபர்நைஃப் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் திறன்மிக்க, ஏறக்குறைய 3000 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்திருக்கின்ற திறன்மிக்க சிறப்பு மருத்துவர்களின் நிபுணத்துவ குழுவை அப்போலோ கேன்சர் சென்டர் கொண்டிருக்கிறது.  இந்த மிக நவீன தொழில்நுட்பமானது அதற்குப் பிறகு நீண்டதூரம் பயணித்து முன்னேற்றம் கண்டிருக்கிறது. 

இன்றைய தினம் புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகுமுறையை புரட்சிகரமாக மாற்றும் அடுத்த தலைமுறைக்குரிய சைபர்நைஃப் ® S7™ FIM சிஸ்டம் என்ற சாதனத்தை நிறுவி சேவையைத் தொடங்கும் தெற்காசியாவின் முதல் மருத்துவ மையம் என்ற புதிய அளவுகோலை இம்மருத்துவமனை மீண்டும் ஒருமுறை நிறுவியிருக்கிறது.  சைபர்நைஃப் – ல் சான்றிதழுடன் கூடிய ஃபெல்லோஷிப் பயிற்சி திட்டத்தை வழங்குவதற்கு இந்நாட்டில் அங்கீகாரம் பெற்ற முதல் மையமாகவும் அப்போலோ கேன்சர் சென்டர் திகழ்கிறது. 

மருத்துவ செயல்பாடுகளில் பயிற்சி மற்றும் மருத்துவ கல்வி மீது அப்போலோ குழுமம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை இந்த அங்கீகாரம் வலுவாக நிரூபிக்கிறது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.