புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் தஜகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளில் இதுவே அதிகம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
டில்லியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் செல்ல விமானம் ஏற வந்த அவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, பை அடியில் ஷூவில் பணம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 7,20,000 அமெரிக்க டாலர்களும், 4,66,200 யூரோ கன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு ரூ.10.6 கோடி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement