உலகநாயகன்
கமல்
ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் மற்றும் ஷங்கர் 2018 ஆம் ஆண்டே துவங்கிவிட்டனர். ஆனால் பல பிரச்சனைகள் காரணமாக இப்படம் கிடப்பில் போடப்பட்டது.
கிட்டத்தட்ட இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாகவே கருதப்பட்ட நிலையில் கமல் தன் முயற்சியால் மீண்டும் இப்படத்தை தூசுதட்டி துவங்கினார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இந்தியன் 2 பட அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார் கமல். அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கப்பட்டதில் இருந்து பல பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் இப்படத்திற்கு வந்தன.
கமலின் இந்தியன் 2
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கொரோனா ஊரடங்கு, தயாரிப்பாளர் மற்றும் ஷங்கர் இடையே ஏற்பட்ட பிரச்சனை என இவ்வாறு பல சிக்கல்கள் இருந்தன. இருந்தாலும் கமல் தன் முயற்சியினால் மீண்டும் இந்தியன் 2 படத்தை துவங்கினார். இம்முறை லைக்காவுடன் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் சேர்ந்து இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகின்றது.
HBD Yogibabu: உன்ன ஏன்பா இப்படி கிண்டல் பன்றாங்க..படம் பார்த்து கதறி அழுத தாய்..ஆறுதல் சொன்ன யோகி பாபு..!
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை படக்குழு போட்டுப்பார்த்துள்ளது. என்னதான் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் இப்படம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஓடுகின்றதாம். இதன் காரணமாக தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை விடுதலை படத்தை போல இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என ஷங்கர் மற்றும் கமல் முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.
இரண்டு பாகமாக வெளியாகும் என தகவல்
ஆனால் இதற்கு தயாரிப்பு நிறுவனம் சம்மதிப்பார்களா என்பது தான் தற்போது சந்தேகமாம். ஆனாலும் இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவதால் அதனை இரண்டு பாகங்களாக வெளியிட்டால் தயாரிப்பாளருக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். எனவே இந்த யோசனைக்கு கண்டிப்பாக தயாரிப்பு நிறுவனம் க்ரீன் சிக்னல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே உண்மை நிலவரம் என்ன என்பது பற்றி தெரியவரும். எனவே அதுவரை ரசிகர்கள் சற்று காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.