சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
படத்தின் பட்ஜெட்டை போலவே ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிலும் சன் பிக்சர்ஸ் தரப்பில் பல சர்ப்ரைஸ்ஸான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாம்.
அதில் ஒன்றாக விஜய்யையும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வைக்கலாம் என்ற முயற்சி தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படுகிறது.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு நோ சொன்ன விஜய்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் 20 நாட்களே உள்ளன. இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜெயிலர் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதியான சனிக்கிழமை நடைபெறுகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினி, தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், அனிருத், இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட ஜெயிலர் படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர். அதேபோல், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன் உட்பட மேலும் பல பிரபலங்கள் பங்கேற்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
முக்கியமாக டாப் ஹீரோக்களான கமல்ஹாசனும் விஜய்யும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது கமல் மட்டுமே ஓக்கே சொன்னதாக தெரிகிறது. இது இன்னும் உறுதியாகாத நிலையில், விஜய் முடியாது என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சன் பிக்சர்ஸ் பேனரில் படங்கள் நடித்து வருகிறார் விஜய்.
அதனால் விஜய்யை நிகழ்ச்சிக்கு வரவைக்க சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்தே முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயிலரின் இரண்டாவது சிங்கிளாக வெளியான ‘ஹ்ம்க்கும் டைகர் கா ஹ்ம்க்கும்’ பாடல், விஜய்யை மறைமுகமாக தாக்குவதாக சர்ச்சை கிளம்பியது. அடிக்கடி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பலரும் பேசுவதால், இந்தப் பாடல் மூலம் ரஜினி ஊமை குத்து கொடுத்துவிட்டார் என பேசப்பட்டது.
லியோ ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் தாறுமாறாக நடைபெற்று வரும் நேரம், ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிளால் விஜய் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். அதனால், தான் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து அழைப்பு வந்தும், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவை விஜய் புறக்கணித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் இது உண்மையில்லை என்றும், விஜய் அவரது பட விழாக்கள் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார். அதனால் அவரை ஜெயிலர் படக்குழு அழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் கோலிவுட் வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.