Mari Selvaraj: மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு: 'வாழை' படம் குறித்த முதல் விமர்சனம்.!

கடந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான இந்தப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பினை பெற்றது. உதயநிதியின் கடைசி படமாக வெளியாகி பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து மாரி செல்வராஜின் அடுத்த படமாக ‘வாழை’ உருவாகியுள்ளது.

பரியேறும் பெருமாள் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் தனது இரண்டாவது படத்திலே தனுஷை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். இவர்கள் கூட்டணியில் கர்ணன் என்ற படம் வெளியானது. இந்தப்படமும் வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த இரண்டுமே சமூக நீதி பேசும் படங்களாக வெளியாகி அமோக வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து தனது மூன்றாவது படைப்பாக மாமன்னனை இயக்கினார் மாரி செல்வராஜ். வடிவேலு, பகத் பாசில், உதயநிதி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது ‘மாமன்னன்’. இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர்.

‘மாமன்னன்’ படத்துக்கு இடையில் ‘வாழை’ என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ். இதற்கான படப்பிடிப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் துவங்கியது. இதனை உதயநிதி துவங்கி வைத்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இந்தப்படத்தை சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இந்தப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலமாக பிரபலமான பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

Prabhu Deva: முதன்முறையாக கைக்குழந்தையுடன் திருப்பதி வந்த பிரபுதேவா: வைரலாகும் வீடியோ.!

மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள ‘வாழை’ படத்தினை
உதயநிதி ஸ்டாலின்
பார்த்துள்ளார். இந்தப்படத்தை பாராட்டி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘வாழை உங்களின் சிறந்த படைப்பு. மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினின் பதிவை மேற்கோள் காட்டி இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி சார். ‘வாழை’ படத்தின் முதல் பார்வையாளர் நீங்கள் தான். உங்கள் அன்பான வார்த்தைகள் நம்பிக்கையை தந்தது. லவ் யூ சார் என பதிலளித்துள்ளார். இதனால் ‘வாழை’ படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Kamal Haasan: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.