வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் பரிமாற்றத்திற்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமிங்கே இரண்டு நாள் பயணமாக டில்லி வந்தார். பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த பயணம் தொடர்பாக கொழும்புவில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி கூறியதாவது: இலங்கையில், அமெரிக்க டாலர், சீனாவின் யென், யூரோ ஆகியவற்றை பயன்படுத்தப்படுவது போல், இந்திய ரூபாயையும் உள்ளூர் பரிமாற்றத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், இந்திய தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல நாட்டு கரன்சிகளை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் குறையும்.
திரிகோணமலையை தொழில், எரிசக்தி மற்றும் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான மையமாக மாற்றுவதற்கான இந்தியா இலங்கை இடையிலான ஒப்பந்தத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இலங்கை அணி சேரா நாடு. கூட்டுக்குழு மூலம் சாத்தியமான திட்டங்களை கண்டறியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளோம். இத்தகைய வெளிப்பாடையான ஒப்பந்தத்திற்கு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement