புதுச்சேரியை சேர்ந்தவர் ஆறுமுகம், 65. இவர், தனது மனைவி மற்றும் 25 வயதுள்ள மகன் ஆகியோருடன், திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்து ஒன்றில் நேற்று இரவு அமர்ந்திருந்தனர்.
பேருந்து ஓட்டுனர் ஏறி பார்த்தபோது, மூவரும் விஷம் அருந்தி மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. அவர்களை, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஆறுமுகத்தின் மகன் மூளை வளர்ச்சி குன்றியவர் என தெரியவந்தது.
அவரை பராமரிக்க முடியாமல் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றிருக்கலாம் என தெரியவருகிறது. திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement