இந்திய பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையாரை, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் டெல்லியில் உள்ள ராஸ்டிரபதி பவனில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, பாதுகாப்பு, கலாச்சார, உறவுகளை வலுப்படுத்து சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இந்திய வம்சாவளி மலையக மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டன.
இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கீகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளமை தொடர்பிலும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
ஜனாதிபதி தலைமையிலான இந்த சந்திப்பில் என்னுடன், ஜனாதிபதியின் ஆலோசகர் மற்றும் செயலாளர், சில அமைச்சர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.