Vanitha Vijayakumar – பிரபுதேவாவை வெறித்தனமாக காதலித்தேன்.. அதையும்கூட செய்தேன்.. வனிதா ஓபன் டாக்

சென்னை: Vanitha Vijayakumar (வனிதா விஜயகுமார்) பிரபுதேவாவை ரொம்பவே காதலித்ததாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டினார். நடிப்பைவிட சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்பவர் வனிதா. தனது குடும்பத்தினரிடமிருந்து பல காலமாக ஒதுங்கியிருக்கும் அவர் விஜயகுமார், அருண் விஜய் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தவர்.

இரண்டு திருமணங்கள்: வனிதா விஜயகுமார் மொத்தம் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டவர். ஆனால் இரண்டு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து பிரபல நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்ததாக கூறினார். அந்தக் காதலும் கடைசியில் சர்ச்சையிலேயே முடிந்தது. பிறகு பீட்டர் பால் என்பவரை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணமும் பிரிவில் முடிந்திருக்கிறது.

பிக்பாஸ்: சினிமா,தொலைக்காட்சி தொடர்களில் தலைகாட்டி வந்த வனிதா பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் தனது செயல் மற்றும் பேச்சால் மக்கள் மத்தியில் கவனிக்கப்படுபவராக இருந்தார். பிக்பாஸிலிருந்து வெளியேஎ வந்த பிறகு ஒரு சில ஊடகங்களில் பிரபலங்களை பேட்டி எடுத்துவருகிறார். அதுமட்டுமின்றி ஒரு சில படங்களிலும் நடித்துவருகிறார்.

வனிதா பேட்டி: இந்நிலையில் வனிதா அளித்த சமீபத்திய பேட்டியில், “பிரபுதேவாவை நான் வெறித்தனமாக காதலித்தேன். காதலன் படம் வந்த சமயத்தில் அவருடைய புகைப்படங்களை, அவர் தொடர்பான செய்திகளை அனைத்தையும் சேகரித்தேன். அதுமட்டுமின்றி என்னை நக்மாவாக நினைத்துக்கொண்டு பிரபுதேவாவுடன் கனவில் டூயட் எல்லாம் ஆடியிருக்கிறேன்.

அதிர்ச்சி கொடுத்த பிரபுதேவா: அவர் மீது எனக்கிருந்த அன்பை பார்த்த எனது அப்பா விஜயகுமார் ஒருமுறை பிரபுதேவாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் வருவதையொட்டி வித விதமாக பல அசைவ உணவுகளை சமைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரோ நான் அசைவம் சாப்பிடமாட்டேன் சைவம்தான் என சொல்லிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் முட்டையை வைத்து சமைத்து கொடுத்தேன். அவருக்காக சில நாட்கள் நானும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறவும் செய்திருந்தேன். அதன் பிறகு அசைவம் சாப்பிட தொடங்கிவிட்டேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.