VidaaMuyarachi: கேட்டதை விட அதிகம் கொடுத்த அஜித்… வெறித்தனமாக ரெடியான விடாமுயற்சி படக்குழு!

சென்னை: அஜித்தின் 62வது படத்துக்கு விடாமுயற்சி என்ற டைட்டிலை படக்குழு ஏற்கனவே கன்ஃபார்ம் செய்துவிட்டது.

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி டைட்டில் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கவுள்ள நாள் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

விடாமுயற்சி ஷூட்டிங் அப்டேட்: அஜித்தின் 62வது படத்தை லைகா தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், கதை, திரைக்கதையில் விக்னேஷ் சிவன் சொதப்பியதால், அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டாகியுள்ளார். தடையறத் தாக்க, தடம், கலகத் தலைவன் என தரமான படங்களை இயக்கியுள்ள மகிழ் திருமேனி, முதன்முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார்.

அஜித், மகிழ் திருமேனி, லைகா, அனிருத் என நால்வர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிறது விடாமுயற்சி. இப்படத்தில் அஜித் ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், விடாமுயற்சி படத்தின் ஸ்டார் காஸ்டிங்கை மகிழ் திருமேனி முடிவு செய்துவிட்டாராம். இன்னொரு பக்கம் விடாமுயற்சி படத்தின் மொத்த திரைக்கதையையும் பக்காவாக எழுதிவிட்டாராம்.

இந்த கதைக்காக அஜித் உடல் எடையை குறைக்க வேண்டும் என மகிழ் திருமேனி கூறியதாக தெரிகிறது. இதனால், பைக் டூரில் இருந்த அஜித், அதனை நிறுத்திவிட்டு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து செம்ம ஸ்லிம்மாக மாறிவிட்டாராம். கடந்த வாரம் கூட அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி வைரலானது. இது விடாமுயற்சி படத்துக்காக தான் என சொல்லப்பட்டது. வெயிட் லாஸ் செய்ததுடன் இன்னும் சில மாற்றங்களுடன் ரெடியாகிவிட்டாராம்.

இதனால் விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பைத் தொடங்கலாம் என மகிழ் திருமேனி முடிவு செய்துவிட்டார். அதன்படி, ஆகஸ்ட் 17ம் தேதி முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காக மகிழ் திருமேனி & டீம் ரெடியாக காத்திருக்கிறதாம். அதேபோல் குறைந்த நாட்களில் இந்தப் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதிகபட்சமாக 3 ஷெட்யூல்களில் விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

அதேபோல், முதல் இரண்டு ஷெட்யூலில் அஜித்தின் மொத்த போர்ஷனையும் முடித்துவிட வேண்டும் என மகிழ் திருமேனிக்கு ஆர்டர் போடப்பட்டுள்ளதாம். விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக பைக்கில் வேர்ல்ட் டூர் செல்ல திட்டமிட்டுள்ளார் அஜித். அதனால் தான் முதலில் அவரது காட்சிகளை எடுக்கவுள்ளார்களாம். இந்தப் படம் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.