![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/1690188133_NTLRG_20230724105138780690.jpg)
சிகிச்சைக்கு முன்பாக சுற்றுப் பயணத்தில் சமந்தா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் சமந்தா அவருக்கு ஏற்பட்ட தசை அழற்சி நோய்க்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா செல்ல உள்ளார். அதற்காக அடுத்த ஒரு வருட காலத்திற்கு எந்தப் படத்திலும் நடிக்காமல் இடைவெளிவிடுகிறார் என்கிறார்கள். சமீபத்தில் 'சிட்டாடல்' இந்திய வெப் தொடரின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார் சமந்தா. அதன்பின் வேலூர் பொற்கோவில், ஈஷா யோகா மையம், பண்ணாரி அம்மன் கோயில் என தமிழகத்திலும் சுற்றி வந்தார்.
தற்போது இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து சில புகைப்படங்களைப் பகிர்ந்து “காலை நேரங்கள் இப்படி இருக்கின்றன,” எனக் குறிப்பிட்டுள்ளார். சிகிச்சைக்கு முன்பாக மன அமைதிக்காக சில இடங்களுக்கு அவர் செல்ல முடிவெடுத்து இப்படி சுற்றி வருகிறார் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். சிகிச்சைக்குச் சென்ற பின் நீண்ட ஓய்வு தேவைப்படும் என்பதால் தற்போதே சில இடங்களுக்குச் செல்கிறார் என்கிறார்கள்.