சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு சுவாரசியமான விஷயத்தை வைத்து படக்குழு வெளியிட்டுள்ளது. இது சூர்யாவின் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் சூர்யா நலமா என அனல் பறக்கும் ஒன்றை வசனத்தை பேசி ரசிகர்களை மிரட்டி விட்டார்.
இந்த கிளிம்ஸ் வீடியோ இணையத்தின் மிகப்பெரிய அளவில் வைரலாகி யூடியூபில் சாதனைப்படைத்து வருகிறது.
கங்குவா ஃபர்ஸ்ட் லுக்: கடந்த மூன்று நாட்களாக கங்குவா படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்டுகளை கொடுத்து வந்த படக்குழு நேற்று மாலை கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரில் குதிரை மீது கம்பீரமாக அமர்ந்து இருக்கும் சூர்யா, கையில் வாளை தூக்கியபடி போருக்கு செல்வதற்கு ஆக்ரோஷமாக தயாராக இருக்கிறார்.
சுவாரசியமான தகவல்: இந்த போஸ்டரை டிரெண்டாக்கிய சூர்யாவின் தீவிர ரசிகர்கள் அந்த போஸ்டரில் மறைந்து இருக்கும் சுவாரசியமான விஷயத்தை வைரலாக்கி வருகின்றனர். ஆதாவது அந்த போஸ்டரில் Suriya Sir என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிட கிளைமாக்ஸ் காட்சியில் வந்து ஒட்டுமொத்த கைத்தட்டலையும் பெற்ற Rolex Sir வசனத்தை நினைவுப்படுத்தும் வகையில் கங்குவா போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரம்மாண்டமாக தயாராகி வரும் கங்குவா: 1500 ஆண்டு காலகட்டத்திற்கு முந்தைய காலகடடத்தை மைய திரைக்கதையாக வைத்து உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பான படப்பிடிப்பு: இப்படத்தில் சூர்யா ஐந்து விதமான தோற்றத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. வரலாற்று காலத் திரைப்படம் என்பதால்,இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் கங்குவா படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என்றும், அதன் பின் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.