தமிழ் சினிமாவில் டைமிங் காமெடிகள் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் சந்தானம். காமெடியனாக நடித்தாலும் ஹீரோக்களுக்கு சமமாக படம் முழுக்க டிராவல் செய்வதை போன்று இவரது கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்ற காமெடி நடிகராக வலம் வந்தார் சந்தானம்.
இவர் தற்போது முழு ஹீரோவாக மாறிவிட்டார். இதனால் இவரது காமெடிகளை மிஸ் செய்வதாக ரசிகர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். முன்னதாக சின்னத்திரையில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலமாக பிரபலமான சந்தானம், சிம்புவின் ‘மன்மதன்’ படம் மூலமாக சினிமாவில் நுழைந்தார். விஜய், அஜித், சூர்யா என பிரபல நடிகர்கள் பலருடன் இணைந்து காமெடி செய்துள்ளார் சந்தானம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் தற்போது ‘டிடி ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சந்தானம். இந்தப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, முனிஸ்காந்த், மாறன், மொட்ட ராஜேந்திரன், சுரபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஜுலை 28 ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் சந்தானம். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் டி. ராஜேந்தர் குறித்து சந்தானம் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. டி. ராஜேந்தர் இயக்கி நடித்த ‘
வீராசாமி
‘ படத்தில் சந்தானமும் நடித்திருந்தார்.
Vishal: கடவுள் கையில் தான் உள்ளது: விஜய்யின் அரசியல் குறித்து விஷால் அதிரடி.!
அந்தப்படத்தின் ஷுட்டிங்கின் போது ஒரு ரொமான்ஸ் காட்சியை படமாக்கும் போது நீச்சல் குளத்தின் ஒரு முனையில் இருந்துள்ளார் டி. ராஜேந்தர். மறு முனையில் ஹீரோ, ஹீரோயின் ரொமான்ஸ் செய்வதை போன்ற காட்சி. சரியாக அவர்கள் நடிக்காததால் பலமுறை டேக் போயுள்ளது. ஒருக்கட்டத்தில் கடுப்பான ராஜேந்தர் நீச்சல் குளத்தில் குதித்து அந்தப்பக்கம் போயுள்ளார். ஹீரோவை ரெண்டு அடி அடித்துவிட்டு, சந்தானத்தை வர சொல்லியிருக்கிறார்.
அந்த நேரத்திலும் ஹீரோயினை தொடாமல், சந்தானத்தை அழைத்து அவரை வைத்து அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என ஹீரோவிற்கு நடித்து காட்டியுள்ளார் டி. ராஜேந்தர். அதன்பின்னர் மறுபடியும் நீச்சல் குளத்தில் குதித்து மறுப்பக்கம் போய் அந்த சீனை படமாக்கியுள்ளார். இதே மாதிரி அந்தப்படத்தில் தனக்கு பல அனுபவங்கள் கிடைத்ததாகவும், அவருடன் பணியாற்றுவது ஜாலியான அனுபவம் எனவும் கூறியுள்ளார். டி. ராஜேந்தர் குறித்து சந்தானம் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Indian 2: ‘இந்தியன் 2’ படத்திற்காக பெருசா சம்பவம் செய்யும் ஷங்கர்: மிரளும் ஆண்டவர் பேன்ஸ்.!