A female passenger on the plane was brutalized | விமானத்தில் பெண் பயணி அட்டூழியம்

வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனமான ‘ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் சமீபத்தில், அமெரிக்க வாழ் ஆப்ரிக்க பெண் ஒருவர் பயணித்தார். அப்போது, சிறுநீர் கழிப்பதற்காக விமானத்தில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த சென்றார்.

எனினும், கழிப்பறை சில மணி நேரங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது எனக்கூறி, விமான ஊழியர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். பொறுமை இழந்த அவர், விமானத்தின் நடுப் பகுதியில் உள்ள நடை தளத்திலேயே சிறுநீர் கழித்துள்ளார்.

விமானத்தில் உள்ள கேமராவில் பதிவான இச்சம்பவத்தின் ‘வீடியோ’ பதிவு சமூக வலைதளங்களில் பரவி, கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.