வாரணாசி: உத்தர பிரதேசம் வாரணாசி நகரில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வை துவக்கி உள்ளனர். ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது. இந்த மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த இடத்தில் மீண்டும் கோவில் கட்ட உத்தரவிடக் கோரி, கள ஆய்வு செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் கடந்தாண்டு அக்டோபரில் வாரணாசி மாவட்ட கோர்ட் மறுத்தது. இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிபதி அறிவியல் ஆய்வு செய்து அறிக்கை தர ஏ.எஸ்.ஐ. எனப்படும் இந்திய தொல்லியல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த ஆய்வு இன்று நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement