Vanitha – என்னது விஜய்க்கு தங்கச்சியா.. ஓட்டம் எடுக்கும் வனிதா விஜயகுமார்

சென்னை: Vanitha Vijayakumar (வனிதா விஜயகுமார்) விஜய்க்கு தங்கையாக நடித்தால் செட் ஆகாது நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.

விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் முடிந்தன. இதற்கிடையே நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் வனிதா மீது தொடர்ந்து சர்ச்சை வாசம் அடித்துக்கொண்டே இருக்கும்.

பிக்பாஸ்: இந்தச் சூழலில் அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.

அநீதி: அந்தப் படங்களில் ஒன்று அநீதி. வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் , துஷாரா விஷயன் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சில நாட்கள் முன்பு ரிலீஸான படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. அதுமட்டுமின்றி பல வருடங்கள் கழித்து வசந்தபாலன் இந்தப் படத்தின் மூலம் தனது மேக்கிங்கில் கம்பேக் கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Actress Vanitha Vijayakumar has said that if she plays Vijays sister will not be set

வனிதா பேட்டி: இந்நிலையில் அநீதி படத்தில் நடித்திருக்கும் வனிதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பிக்பாஸ் ஷோதான் நடிப்பைவிட எனக்கு நன்றாக ரீச் கொடுத்தது. அதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் முதல் படமாக அநீதி வெளியாகியுள்ளது. அனைத்து படங்களும் நல்ல கதைகளாகவும், எனக்கு அமைந்த கேரக்டர்கள் சிறப்பானவையாகும் இருக்கின்றன். எஸ்.பிக்சர்ஸ் பேனரில் வசந்தபாலன் இயக்கத்தில் வனிதா மீண்டும் அறிமுகமானது பெருமையாக இருக்கிறது.

விஜய்க்கு சகோதரியா?: அதேபோல் விஜய்க்கு சகோதரியாக நடிப்பீர்களா என கேட்கிறீர்கள். விஜய்க்கு சகோதரியாக என்னால் நடிக்க முடியாது. அது ஒர்க் அவுட்டும் ஆகாது. அவருக்கு தாயாகக்கூட நடிப்பேன். ஆனால் கண்டிப்பாக சகோதரியாக நடிக்க மாட்டேன். அதுமட்டுமின்றி விஜய் தம் அடித்தால் எதிர்க்கிறார்கள் என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருக்கின்றனது. இது பொது அறிவு இல்லாத விஷயம். கதைக்கு தேவை என்றால் செய்யத்தான் வேண்டும். நடிகர்களை குறை சொல்லாதீர்கள்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.