Vijay Antony: ராசி பார்த்து தன் மகன் விஜய் பெயரை விஜய் ஆண்டனிக்கு வைத்த எஸ்.ஏ.சி.

HBDVijayAntony: சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த விஜய் ஆண்டனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

​விஜய் ஆண்டனி​இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் இன்று. இந்த நாளில் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் விஜய் ஆண்டனிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவரின் கொலை படம் குறித்தும் பேசி வருகிறார்கள்.அநீதி​”கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !​​கெரியர்​Ethirneechal: சீரியல் இயக்குவதை நிறுத்துங்க: எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வத்திடம் கூறிய ரஜினிசின்னத்திரையில் இருந்து தன் கெரியரை துவங்கியவர் விஜய் ஆண்டனி. சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலின் டைட்டில் பாடலுக்கு இசையமைத்து தன் இசை பயணத்தை துவங்கினார். பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா எனும் தன் பெயரை அக்னி என மாற்றினார். கனா காணும் காலங்கள், காதலிக்க நேரமில்லை ஆகிய சீரியல்களின் டைட்டில் டிராக்கிற்கும் விஜய் ஆண்டனி தான் இசையமைத்தார்.

​எஸ்.ஏ. சந்திரசேகர்​அக்னியாக வலம் வந்த அவரை தான் இயக்கிய சுக்ரன் படம் மூலம் பெரிய திரையில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்ததே எஸ்.ஏ. சந்திரசேகர் தான். அக்னி என்கிற பெயர் ராசியில்லை. அதனால் ஆண்டனி என்கிற உன் பெயருக்கு முன்னால் என் மகன் விஜய்யின் பெயரை சேர்த்துக்கொள், வெற்றிகரமாக இருப்பாய் என தெரிவித்தார் எஸ்.ஏ.சி. அவரின் பேச்சை கேட்டுத்தான் தன் பெயரை விஜய் ஆண்டனி என மாற்றினார்.

​Nayanthara:என் தங்கமேனு மகன் உயிரை கொஞ்சி விளையாடிய நயன்தாரா: க்யூட் புகைப்படம் இதோ​
​ஹீரோ​இசையமைப்பாளராக பெரிய திரைக்கு வந்த விஜய் ஆண்டனி ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோவாகிவிட்டார். அதில் இருந்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. விஜய் ஆண்டனியை வைத்து படம் எடுத்தால் போட்ட காசை எடுத்துவிடலாம் என தயாரிப்பாளர்கள் நம்பும் நடிகராக இருக்கிறார்.
​எடிட்டர்​புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவர் விஜய் ஆண்டனி. இந்நிலையில் தான் எடிட்டிங் கற்றுக் கொண்டார். தான் ஹீரோவாக நடித்த அண்ணாதுரை படம் மூலம் எடிட்டர் அவதாரம் எடுத்தார். அதன் பிறகு திமிரு பிடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களிலும் எடிட்டராகவும் வேலை செய்தார்.

​பிசியான ஹீரோ​சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்தால் முன்னணி நடிகராவது கடினம் என்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளராக வந்து நடிகராகி, தயாரிப்பாளர்கள் நம்பும் ஹீரோவாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த ஆண்டின் பிசியான நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே வைத்திருக்கிறார்.
​புதுப்புது அவதாரங்கள்​இசையமைப்பாளர், பாடகர், நடிகர், எடிட்டர், பாடலாசிரியர், சவுண்டு என்ஜினியர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், இயக்குநர் என ஏகப்பட்ட அவதாரம் எடுத்துவிட்டார் விஜய் ஆண்டனி. அடுத்ததாக அவர் என்ன அவதாரம் எடுக்கப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் ஆண்டனி படங்கள் என்றாலே வித்தியாசமாக இருக்கும் என்கிற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.