அட்டகாசமான Moto G14 விரைவில் அறிமுகம்: விலை, பிற விவரங்கள் இதோ

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான மோட்டோரோலா சமீப காலங்களில் பல அதிரடி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் போனை அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஒரு லேண்டிங் பேஜ் வெளிவந்துள்ளது. அதன் மூலம் தொலைபேசியின் பெயர் மோட்டோ ஜி14 (Moto G14) என்பதும் இது ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த போனின் விலை சுமார் 10 ஆயிரம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போனின் வடிவமைப்பு பற்றிய தகவல்களும் முன் வந்துள்ளன. மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Moto G14: விவரக்குறிப்புகள்

Moto G14 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் LCD FHD + பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இதன் பவர் சப்ளைக்கு Unisoc T616 சிப்செட் பயன்படுத்தப்படும். மேலும் இது 4GB ரேம் மற்றும் 128GB UFS 2.2 சேமிப்பகத்தைக் கொண்டிருக்கும். கூடுதல் சேமிப்பகத்திற்கு, ஒரு சிறப்பு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் சேர்க்கப்படும். அதைப் பயன்படுத்தி பயனர்கள் சேமிப்பகத்தை விரிவாக்க முடியும்.

Moto G14: பேட்டரி

Moto G14 ஸ்மார்ட்போன் Android 13 ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆனால் Android 14 OS மேம்படுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளை மூன்று ஆண்டுகளுக்குப் பெறுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இது 20W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 34 மணிநேரம் வரையிலான டாக் டைமையும், 94 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக் டைமையும், 16 மணிநேரம் வரையிலான வீடியோ பிளேபேக் டைமையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றது.  G14 மொபைல் போன், ஆடியோஃபைல்களுக்கு, Dolby Atmos தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வரும்.

Moto G14: கேமரா

Moto G14 ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது உயர்தர படங்களை எடுக்க உதவும். இது மேக்ரோ விஷன் மற்றும் நைட் விஷன் போன்ற புகைப்பட அம்சங்களையும் வழங்கும். மேலும், இது ஒரு பக்கவாட்டு கைரேகை ஸ்கேனருடன் வரும், இது கூடுதல் வசதியை வழங்கும்.

Moto G14: இந்தியாவில் இதன் விலை என்ன?

Moto G14 இன் விலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், G13 விலை ரூ.9,999 ஆக இருந்ததால், G14 விலை அதே வரம்பில் இருக்கும் என்று தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். 

கூடுதல் தகவல்:

மோட்டோரோலா சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் மோட்டோ e13 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் க்ரீமி ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.  Motorola Moto e32 6.5-இன்ச் HD IPS திரை 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் தொடங்கப்பட்டது.  உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா Moto e32 மூலம் தனது புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய ‘moto e13’ இரண்டு வகைகளில் வருகிறது – 2GB+64GB மற்றும் 4GB+64GB – இதன் விலை முறையே ரூ.6,999 மற்றும் ரூ.7,999 என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.